Odisha Cyclone Fani Lanfall : சென்னையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஃபனி புயல் மழையைக் கூடத் தரமால் நேராக வடக்கு நோக்கி நகரத் துவங்கியது. வடக்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதாரத்தை தரலாம் இந்த ஃபனி புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தற்போது எங்கே உள்ளது ஃபனி ?
நேற்று நள்ளிரவு 11:30 மணி நிலவரப்படி, ஃபனி புயலானது ஒடிசாவின் பூரிக்கு தெற்கு - தென்கிழக்கில் சுமார் 540 கி.மீ தொலைவில் உள்ளது. மே மூன்றாம் தேதி, அதாவது நாளை இந்த புயல் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபனி பயணிக்கும் பாதையில் 10 கோடி மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேரிடர் மீட்புக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Cyclone Fani, Weather forecast today LIVE News Updates : அச்சுறுத்தும் ஃபனி புயல்.. 103 ரயில்கள் இன்று நிறுத்தம்!