Anuradha Mascarenhas
One dose 82 percent effective : கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இறப்புக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தொற்றுநோய் அறிவியல் நிறுவனம் (National Institute of Epidemiology (ICMR-NIE)) வெளியிட்டுள்ள ஆய்வு மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் டோஸ் 82% இறப்பு எதிராகவும், இரண்டு டோஸ்களும் 95% இறப்புகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Covid-19 vaccine effectiveness in preventing deaths among high-risk groups in Tamil Nadu, India (அதிக பாதிப்பு ஆபத்து இருக்கக் கூடிய மக்கள் பிரிவில் இறப்புக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன்) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் இந்தியன் ஜார்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் ஜூன் 21ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை, தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது (0, 1 மற்றும் 2 தடுப்பூசி அளவுகளாக பிரித்து), மற்றும் இரண்டாவது அலையின் போது கோவிட் -19 இறப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேதி மற்றும் தடுப்பூசி குறித்த விவரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.
சென்னையில் 1.5% ஆக குறைந்த கொரோனா நேர்மறை விகிதம்
தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட மற்றும் செலுத்திக்கொள்ளாத காவல்துறையினரிடையே ஏற்பட்ட இறப்புகளை மதிப்பீடு செய்வதற்காக இந்த தரவு பயன்படுத்தப்பட்டது என்று ஐ.சி.எம்.ஆர் - என்.இ-இ-வின் இயக்குநர் மருத்துவர், மனோஜ் முர்ஹெக்கர் கூறியுள்ளார்.
1,17,524 காவலர்கள் தமிழக காவல்துறையில் பணியாற்றுகின்றனர். பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 14ம் தேதி வரையில் 32,792 காவல்துறையினர் ஒரே ஒரு டோஸை மட்டும் பெற்றுள்ளனர். 67,673 நபர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். 17,059 நபர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை.
இதுவரை 31 கொரோனா இறப்புகள் தமிழக காவல்துறையில் ஏப்ரல் 13 முதல் மே 14 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்து போன 31 நபர்களில் 4 பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தனர். 7 நபர்கள் 1 டோஸ் மட்டும் போட்டுக் கொண்டனர். மீதம் உள்ள 20 நபர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை.
கோவிட் -19 தடுப்பூசியுடன் தொடர்புடைய இறப்பு அபாயத்தை கணக்கிடுவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களின் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதல், இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்ட ஆயிரம் காவலர்களில் இறப்பு விகிதம் முறையே 0.21 மற்றும் 0.06% ஆக உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களில் இறப்பு விகிதம் 1.17% ஆக பதிவு செய்யப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil