/tamil-ie/media/media_files/uploads/2020/05/EXZKWhcU8AAZCpt.jpg)
Operation Samudra Setu : INS Jalashwa entered Male port to repatriate Indians from Maldives
Operation Samudra Setu : INS Jalashwa entered Male port : கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள், மாநிலங்கள், மற்றும் நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டிற்கு திரும்ப முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மாலத்தீவில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஷ்வா (INS Jalashwa) கப்பல் மாலத்தீவிற்கு சென்றுள்ளது.
#INSJalashwa entering Male' port for the 1st phase under Operation #SamudraSetu to repatriate Indians from Maldives.@MEAIndia@DrSJaishankar@harshvshringla@indiannavypic.twitter.com/D7r8lUrJxf
— India in Maldives (@HCIMaldives) May 7, 2020
இது தொடர்பாக மாலத்தீவில் இருக்கும் இந்தியாவுக்கான உயர்மட்ட ஆணையம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலஷ்வா தற்போது மாலே துறைமுகத்தை அடைந்துவிட்டதை உறுதி செய்துள்ளது. சமுத்ர சேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்துவரும் பணியில் முதற்கட்டமாக தற்போது ஜலஷ்வா மாலத்தீவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
வந்தே மாதரம் மற்றும் சமுத்திர சேது திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. மே 7 தேதி முதல் 13 வரை, 64 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் 15, 000 இந்தியர்களை தாயகம் அழைத்துவர முடிவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.