எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோனைக் கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி திங்களன்று அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாரின் கிளர்ச்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சி கூறிய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வந்தது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாட்னாவில் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த கூட்டத்தை 2023 ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்துவோம்” என்று அறிவித்தார்.
இதனிடையே, மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பெங்களூருவில் ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டும் திட்டம் பிரச்னை காரணமாக, பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், பெங்களூருவில் ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீரென ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம்லா அல்லது ஜெய்பூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
இதையும் படியுங்கள்: எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு எனக்கே – அஜித் பவார்; மக்கள் என்னுடன் உள்ளனர் – சரத் பவார்
"பாசிச மற்றும் ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடித்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு துணிச்சலான பார்வையை முன்வைப்பதற்கான எங்கள் அசைக்க முடியாத தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று கே.சி.வேணுகோபால் கூறினார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய வேணுகோபால், அஜித் பவாரின் கிளர்ச்சி "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்கப் போவதில்லை", ஏனெனில் இது "NCP கட்சியின் பிரச்சினை" என்று கூறினார். NCP கட்சி தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிராவில் இந்த "நாடகம்" வெளிவருவதற்கு வழிவகுத்துள்ளதாக கூறிய வேணுகோபால், "இது அமலாக்கத்துறை (ED) மற்றும் அவர்களின் ஏஜென்சிகளின் மூலம் செய்யப்படும் தெளிவான விளையாட்டு" என்றும் கூறினார். மேலும், "ஷரத் பவார் கட்சியின் மிகப் பெரிய தலைவர், அவரால் சூழ்நிலையை சமாளிக்க முடியும்" என்றும் அவர் கூறினார்.
“பிரதமர் மோடி சமீபத்தில் என்.சி.பி தலைவர்கள் மீது ஊழலுக்காக ஒரு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினார், இப்போது இந்த நாடகத்தைப் பார்க்கிறோம். இது அமலாக்கத்துறை (ED) மற்றும் அவர்களின் ஏஜென்சிகளின் மூலம் செய்யப்பட்ட தெளிவான விளையாட்டு. இது மகா விகாஸ் அகாதியை (MVA) பாதிக்காது. பா.ஜ.க.,வுக்கு எதிராக இன்னும் தீவிரமாகப் போராடுவோம். இது எதிர்க்கட்சி ஒற்றுமையை பாதிக்கப் போவதில்லை, இது என்.சி.பி கட்சியின் பிரச்சினை. ஷரத் பவார் கட்சியின் மிகப்பெரிய தலைவர், அவரால் நிலைமையை சமாளிக்க முடியும். சில தலைவர்கள் கட்சி மாறுவதால், கட்சியின் ஆதரவாளர்களும் மற்ற உறுப்பினர்களும் அவர்களுடன் செல்வார்கள் என்று அர்த்தம் இல்லை” என்று வேணுகோபால் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாட்னா கூட்டத்தில், 15 கட்சிகளைச் சேர்ந்த 32 தலைவர்கள் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வை எதிர்கொள்ள எதிர்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்ததால், என்.சி.பி தலைவர் அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வராக பதவியேற்றார். அவர் துணை முதல்வர் பதவியை பா.ஜ.க.,வின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.