ப.சிதம்பரத்திடம் 5 நாள் சிபிஐ விசாரணை: நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்

P Chidambaram News Live : நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Modi govt’s love for cow is only on paper’: Chidambaram - 'பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டும் தான்' - ப.சிதம்பரம் ட்வீட்
‘Tamil Nadu news today in tamil,

INX Media Case CBI Arrested P Chidambaram Updates: ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று(ஆக.,21) இரவு கைது செய்யப்பட்டார். டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது. நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

INX Media Case CBI Arrested P Chidambaram Updates

சுவர் ஏறி குதித்த அதிகாரிகள் : சிதம்பரம் வீட்டின் கேட் பூட்டப்பட்டதால் அதிகாரிகள் வீட்டின் கதவை தட்டினர்.கதவு திறக்கப் படாததால் அதிகாரிகள் உடனே சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். ஒரு பிரிவினர் முன் பக்க வழியாகவும், ஒரு பிரிவினர் வீட்டின் பின் பக்க வழியாகவும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த அதிகாாிகள் தொடர்ந்து மற்ற அதிகாரிகளையும் உள்ளே அழைத்து சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்தனர்.  மேலும் படிக்க : முன் ஜாமீன் நிராகரிப்பு முதல் சிதம்பரத்தின் கைது வரை… ஐ.என்.எக்ஸ் வழக்கின் பரபரப்பான 2 நாட்கள்

Live Blog

P Chidambaram CBI case arrest news live updates : காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது மற்றும் அவர் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இந்த பக்கத்தில் காணலாம்.


11:43 (IST)23 Aug 2019

ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அமலாக்கத்துறை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு கோரிய ப.சிதம்பரத்தின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் இருப்பதால், அவர் வழக்கமான ஜாமீனுக்காக புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிதிகளை பெருமளவில் செலுத்தியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், அவரது பங்களிப்புக்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

22:46 (IST)22 Aug 2019

ப.சிதம்பரம் தனது தரப்பு வாதத்தை சுருக்கமாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ கடுமையான ஆட்சேபனை இருந்தபோதிலும், அவரது தரப்பு வாதத்தை சுறுக்கமாக சமர்ப்பிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிபிஐ காவல் விசாரணை தொடர்பான வாதங்கள் முடிந்தவுடன், ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம், தனது கட்சிக்காரரிடம் சிபிஐ விசாரணை நடத்தியபோது கேட்கப்பட்ட கேள்விகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர சிறப்பு நீதிபதி அவருக்கு பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார். ப.சிதம்பரம், ஜூன் 6, 2018 அன்று, விசாரணை முகமைகள் அவரை முதல் முறையாக விசாரணைக்கு அழைத்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் கோரிக்கை சமர்ப்பித்தவுடன், நீதிமன்றம் அதன் உத்தரவை ஒத்திவைத்து நீதிமன்ற அறையைவிட்டு நீதிபதி வெளியேறினார்.

22:04 (IST)22 Aug 2019

சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விசாரணை முகமைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரம் உள்ளதாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், “ப.சிதம்பரம் விசாரணை முகமையின் விசாரணைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். பணம் யாரிடமிருந்து எந்த வங்கி மூலம் யார் பணம் எடுத்தார்கள் என்ற மொத்த ஆவணங்களும் உள்ளன..” என்று கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

21:55 (IST)22 Aug 2019

சந்திராயன் – 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் கிடைத்தது

சந்திராயன் 2 வின்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் கருவி நேற்று (ஆகஸ்ட் 21, 2019) சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2650 கி.மீ உயரத்தில் எடுக்கப்பட்ட நிலாவின் முதல் புகைப்படத்தை பார்வைக்கு அனுப்பியுள்ளது.

அந்த புகைப்படத்தில் சந்திரனில் குறிப்பிடப்பட்டுள்ள மரே ஓரியண்டேல் பேசின் மற்றும் அப்பல்லோ பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

21:40 (IST)22 Aug 2019

நாளை மறுநாள் நடைபெறவிருந்த திமுக எம்.பி.-க்கள் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை.

21:12 (IST)22 Aug 2019

கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வியைப் பாராட்டிய கார்த்தி சிதம்பரம்

இன்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை ஆதரித்து வாதாடிய மூத்த வழக்கறிஞர்கல் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோரைப் கார்த்தி சிதம்பரம் பாராட்டினார்.

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்தில் வாதிடக் கேட்பது ஒரு பாக்கியம். அவர்களின் முதல் தரமான வாதம். அவர்கள் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அது சட்ட மாணவர்கள் அனைவருக்கும், குறிப்பாக நீதிமன்ற வாதங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறினார்.

20:59 (IST)22 Aug 2019

ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நாளை விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, ஊழல் மற்றும் பண மோசடி ஆகிய இரண்டு வழக்குகளில் ஜாமீன் மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20:35 (IST)22 Aug 2019

ப.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையை விரிவுபடுத்துகிறது சிபிஐ

ப.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையை சிபிஐ விரிவுபடுத்துகிறது; அந்நிய நேரடி முதலீடு அனுமதி கோரிய மற்ற நிறுவனங்களும் விசாரணயின் கீழ் வருகிறது

முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையை சிபிஐ விரிவுபடுத்தியுள்ளது, அவரது பதவிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா தவிர பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு அனுமதிகளை விசாரணையின் கீழ் கொண்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எஃப்.ஐ.பி.பி வழியாக வெளிநாட்டு முதலீட்டு அனுமதிகளை எளிதாக்குவதற்கு சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியும் பிற நிறுவனங்களிடமிருந்து தவறான முறையில் பணம் பெற்றதாக சிபிஐ சந்தேகிக்கிறது. அதனால் முன்னாள் அமைச்சர் காவலில் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர். சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும் சிபிஐ சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளனர்.

20:22 (IST)22 Aug 2019

அரசாங்கத்தை விமர்சித்ததற்காக சிதம்பரம் கைது – சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குற்றச்சாட்டு

ப.சிதம்பரத்தின் கைது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில்: ப.சிதம்பரம் தொடர்ந்து மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வந்தார். அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி வந்தார். அரசாங்கத்தால் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாததால் அவர்கள் எதிர்க் குரல்களை அடக்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

20:16 (IST)22 Aug 2019

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: பணம் செலுத்தப்பட்டிருந்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – நீதிமன்றம்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிதம்பரத்தை சிபிஐ காவலுக்கு அனுப்பிய சிறப்பு நீதிமன்றம் “பணம் அனுப்பபட்ட வழி, அவ்வாறு செலுத்தப்பட்டிருந்தால், கண்டறியப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

“இது ஆவண சான்றுகள் அடிப்படையிலான வழக்கு, இதில் வழக்கு மற்றும் அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டும்.” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

20:11 (IST)22 Aug 2019

விசாரணைகளை தர்க்கரீதியாக முடிவுக்குக் கொண்டுவர சில நேரங்களில் காவல்துறை விசாரணை பயனுள்ளதாக இருக்கும் – நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரித்துவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணைகளை தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நேரங்களில் காவல்துறை விசாரணை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளது.

19:45 (IST)22 Aug 2019

ப.சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தீவிரமான, ஆழமான விசாரணை தேவை – நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதமரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தீவிரமான, ஆழமான விசாரணை தேவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

19:10 (IST)22 Aug 2019

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து சென்ற சிபிஐ

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சிபிஐ ப.சிதம்பரத்தை நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

18:56 (IST)22 Aug 2019

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சிறப்பு நீதிபதி உத்தரவு.

சிதம்பரம் தனது குடும்பத்தை தினமும் சந்திக்க அனுமதிக்கப்படுவார் என்றும் அவ்வப்போது மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்படுவார் என்றும் நீதிபதி கூறினார்.

18:39 (IST)22 Aug 2019

சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்

இந்த வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட மற்ற அனைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில், சிபிஐ மனுவை சிதம்பரத்தின் வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

18:35 (IST)22 Aug 2019

ப.சிதம்பரம் கைது; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – ராஜ் தாக்கரே கருத்து

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில்: ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்று சிபிஐ-யின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் 
நவாப் மாலிக் கூறுகையில், மோடி அரசாங்கம் விசாரணை முகமைகளை தவறாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

17:22 (IST)22 Aug 2019

அரை மணி நேரத்தில் தீர்ப்பு

ப.சிதம்பரம் தரப்பு வாதமும், சிபிஐ தரப்பு வாதமும் முடிந்திருக்கும் நிலையில், இன்னும் அரை மணி நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

16:59 (IST)22 Aug 2019

அதிபுத்திசாலி சிதம்பரம் – சிபிஐ

ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞருக்கும், சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு விசாரணையை தட்டிக்கழிப்பதில் ப.சிதம்பரம் அதி புத்திசாலி. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. 

16:51 (IST)22 Aug 2019

சிதம்பரம் இசைவு மட்டுமே கொடுத்தார் – சிங்வி

ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 6 செயலர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அந்த ஒப்புதலுக்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் இசைவு மட்டுமே தந்துள்ளார். அந்த 6 பேரில் ஒருவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார் – அபிஷேக் மனு சிங்வி

16:40 (IST)22 Aug 2019

காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை – சிதம்பரம் தரப்பு

ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள்; கைது செய்வது என்பது கட்டாயமல்ல, மொத்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான். இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து நான்கு மாதம் கழித்தே சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்திராணி அப்ரூவரவாக மாறியதால் இந்த கைது நடவடிக்கை , ஆனால் அப்ரூவராக மாறி தற்போது அவர் சொன்னதை , 2018லேயே சொல்லி உள்ளார். வேறு எதற்காகவோ இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை – சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபில்

16:22 (IST)22 Aug 2019

2017ம் ஆண்டிலேயே விசாரணை செய்திருக்கலாம் – கபில்சிபில்

நேற்று இரவு சிதம்பரத்திடம் கேட்கபட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்று வாதிட்ட கபில்சிபில் நேற்றிரவு கேட்கப்பட்ட 12 கேள்விகளையும் நீதிபதியிடம் கொடுத்தார் கபில்சிபில். 2017ம் ஆண்டிலேயே விசாரணை செய்திருக்கலாம். 2018ல் விசாரணைக்கு அழைத்த போது கூட விசாரிக்கலாம் ஆனால் அது எதையும் அவர்கள் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் கபில்சிபில். அபிஷேக் மனு சிங்வி தனது தரப்பு விவாதங்களை துவங்கியுள்ளார்.

16:11 (IST)22 Aug 2019

சி.பி.ஐ அழைப்பை ஒரு போதும் சிதம்பரம் நிராகரிக்கவில்லை – கபில் சிபில்

ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை இது நாள் வரையில் நடத்தப்பட்டது. விசாரிக்கும் தேவையிருந்திருந்தால் மீண்டும் சிதம்பரத்தை அழைத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. சி.பி.ஐ அழைப்பை ஒரு போதும் சிதம்பரம் நிராகரிக்கவில்லை என அறிவித்தார் கபில்சிபி. மேலும் 2018ம் ஆண்டு நடந்த விசாரணைக்கான புத்தகத்தை காட்டுங்கள் ஒத்துழைப்பை அவர் தர மறுத்தாரா என்று தெரிந்துவிடும் என்றும் அவர் பேச்சு. நேற்று இரவு கூட வெறும் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு தற்போது ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுகிறார்கள் என்றும் கபில்சிபில் வாதம்.

16:01 (IST)22 Aug 2019

கபில் சிபில் காரசார விவாதம்

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் பணியாற்றிய 6 செயலாளர்கள் முதலீடுகளை அனுமதித்தனர். ஆனால் அவர்கள் யாரையும் சி.பி.ஐ கைது செய்யவில்லை என்று கபில் சிபில் கார சார வாதம் நடத்தி வருகின்றனர்.

15:57 (IST)22 Aug 2019

கபில் சிபில் வாதம் துவக்கம்

சிதம்பரம் சார்பில் ஆஜராகியிருக்கும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ப.சிதம்பரத்திற்காக வாதாடி வருகிறார். குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் பெயிலில் வெளியே உள்ளனர். பாஸ்கர ராமன், கார்த்தி சிதம்பரம், பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி (டீஃபால்ட் பெயில்) என அனைவரும் பெயில் வெளியே உள்ளனர் என்று வாதம்

15:52 (IST)22 Aug 2019

துஷார் மேத்தா வாதம் -2

சிதம்பரம் அமைதியாக ஒன்றும் இல்லை ஆனால் கேட்கப்படும் கேள்விகளையும், விசாரணையையும் தவிர்த்து வருகிறார் என்று வாதாடிய துஷார் மேத்தா, காவலில் எடுத்து, மற்றவர்களோடு வைக்கப்பட்டு விசாரித்தால் மட்டுமே முழுமையான விசாரணை சாத்தியம் என்றும் கூறுகிறார்.

15:48 (IST)22 Aug 2019

துஷார் மேத்தா வாதம்

சி.பி.ஐ தரப்பில் ஆஜரானார் துஷார் மேத்தா. 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றத்திடம் சி.பி.ஐ கோரிக்கை. துஷார் மேத்தா தன்னுடைய வாதத்தில், “ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று வாதம். மேலும் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் மௌனம் சாதித்து வருகிறார் ப.சிதம்பரம் என்றும் அவர் கூறுகிறார்.  

15:34 (IST)22 Aug 2019

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் சிதம்பரம் ஆஜர்

சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு வாதம் துவக்கம். சி.பி.ஐ தரப்பில் இருந்து துஷார் மேத்தா வாதாடுகிறார். கபில்சிபில், அபிசேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தனர்.

15:26 (IST)22 Aug 2019

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார் சிதம்பரம்

சி.பி.ஐ அதிகாரிகள், சி.பி.ஐ அலுவலக்த்தில் இருந்து ப.சிதம்பரத்தை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர். 

15:09 (IST)22 Aug 2019

டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சிதம்பரம் தற்போது சி.பி.ஐ அலுவலகத்தில் இருந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்த்ப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

14:56 (IST)22 Aug 2019

நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்

டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்னும் சற்று நேரத்தில் ஆஜரப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் கபில் சிபில் உள்ளிட்டோர் வருகை.

14:45 (IST)22 Aug 2019

ஐ.என்.எக்ஸ் வழக்கை விசாரித்த அதிகாரி இடம் மாற்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை விசாரணை செய்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி ராகேஷ் அகுஜா டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

14:32 (IST)22 Aug 2019

சி.பி.ஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை

சி.பி. ஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சி.பி.ஐ தரப்பு அறிவித்துள்ளது. கூறிய பதிலையே மறுபடி மறுபடி கூறுவதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்து 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டம்

14:03 (IST)22 Aug 2019

சிதம்பரம் கைது : ஸ்டாலின் கண்டனம்

சி.வி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்திருப்பது நாட்டுக்கே அவமானம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என்றும் முக ஸ்டாலின் அறிவிப்பு.

13:17 (IST)22 Aug 2019

இமாச்சல பிரதேச சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தாெடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இமாச்சல பிரதேச சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி தலைமையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

12:32 (IST)22 Aug 2019

சிதம்பரம் கைது பின்னணியில் அரசு இல்லை – அமைச்சர் கிஷன் ரெட்டி

நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு துளியும் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அல்லது பாரதிய ஜனதா கட்சியின் பங்கு துளியும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

11:56 (IST)22 Aug 2019

இந்திய அரசியலமைப்பின் மீது மரியாதை கொண்டவர் சிதம்பரம் – காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிக மரியாதை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரஜ்வாலா தெரிவித்துள்ளதாவது, தனது மகளையே கொன்ற வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இந்திராணி முகர்ஜியை அப்ரூவர் ஆக்கி, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிதம்பரத்தை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிதம்பரம், அரசியல் சட்டத்தை மதித்து நடப்பவர். அவரை சிபிஐ இரவுநேரத்தில் வீடுபுகுந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

11:21 (IST)22 Aug 2019

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை – காங்கிரஸ்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுரஜ்வாலா கூறியதாவது,  மத்திய அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை தனது சொந்த விருப்பு வெறுப்புக்காகவும் எதிரிகளை பழிவாங்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறது.  கடந்த 2 நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்தோமேயானால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

10:48 (IST)22 Aug 2019

சிதம்பரம் கைதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகி கோபண்ணா தெரிவித்துள்ளார்.

10:05 (IST)22 Aug 2019

ஜந்தர்மந்தரில் போராட்டம் – கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, காங்கிரஸ் கட்சியை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாக கார்த்தி சிதம்பரம் அறிவித்துள்ளார்.

09:47 (IST)22 Aug 2019

காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பவே இந்த கைது நடவடிக்கை – கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் விவகாரம் நாடுமுழுவதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசைதிருப்பவே, தனது தந்தை ( ப.சிதம்பரம்) கைது செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

09:41 (IST)22 Aug 2019

நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்கிறோம் – சல்மான் குர்ஷித்

சிதம்பரம் கைது விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமைக்கு தான் விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பாெறுத்திருந்து பார்ப்போம் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

09:33 (IST)22 Aug 2019

சிதம்பரம் கைது விவகாரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல – தமிழிசை

காங்கிஸ்முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைதானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தர‌ராஜன் மறுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், தன் மீது தவறில்லை என்றால் விசாரணைக்கு ஆஜராகாமல் ப.சிதம்பரம் ஓடி ஓளிந்த‌து ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

08:55 (IST)22 Aug 2019

சிபிஐ காரை மறித்த சிதம்பரம் ஆதரவாளர்

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து செல்லும்போது சிபிஐயின் காரை, சிதம்பரம் ஆதரவாளர் ஒருவர் மறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக அந்த நபரை அப்புறப்படுத்தினர்.

08:51 (IST)22 Aug 2019

சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று(ஆக.,22) மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்.

08:49 (IST)22 Aug 2019

சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, 10 முதல் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

P Chidambaram CBI case arrest news live updates : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம், கடந்தாண்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைக் கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அது பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருடைய முன்ஜாமின் மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலையே மனு தாக்கல் செய்யப்பட்டது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: P chidambaram arrest cbi delhi court

Next Story
Express Governance Awards – இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘கவர்னன்ஸ்’ விருது வழங்கும் விழாExpress Governance Awards
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com