முன் ஜாமீன் நிராகரிப்பு முதல் சிதம்பரத்தின் கைது வரை… ஐ.என்.எக்ஸ் வழக்கின் பரபரப்பான 2 நாட்கள்

ப.சிதம்பரத்தின் கைதுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

By: Updated: August 22, 2019, 10:41:03 AM

INX Media Case P Chidambaram’s arrest timeline : ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு, அந்நிய நேரடி முதலீடாக ரூ.305 முதலீடு செய்ய ஒப்புதல் பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக மே மாதம் 2017ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது. 2007ம் ஆண்டு நடைபெற்ற இந்த பணப் பரிவர்த்தனையின் போது மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டவர் ப.சிதம்பரம். அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ என இரு தரப்பும் முறையே பண மோசடி வழக்கு மற்றும் ஊழல் வழக்கினை பதிவு செய்துள்ளன.

INX Media Case P Chidambaram’s arrest timeline

20/08/2019 : மதியம் :  ப.சிதம்பரம் இவ்வழக்கில் இருந்து கைதாவதை தடுக்கும் வகையில் முன் ஜாமீன் பெற்று வந்தார். இந்நிலையில் 20ம் தேதி அவருக்கான முன் ஜாமீன் மற்றும் கைதுக்கான தடை மனு இரண்டையும் நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

20/08/2019 : மாலை : டெல்லி கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரத்தின், கபில்சிபில் தலைமையிலான ஆலோசகர் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 21ம் தேதி காலையில் தலைமை நீதிபதி அடங்கிய அரசியல் சாசனக் குழு இவ்வழக்கை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

20/08/2019 : இரவு : புதுடெல்லியின் ஜோர் பாக் பகுதியில் அமைந்திருக்கும் ப.சிதம்பரத்தின் வீட்டினை முற்றுகையிட்ட சி.பி.ஐ அதிகாரிகள், சிதம்பரம் 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டு சென்றனர். பின்பு மீண்டும் ஒரு முறை அவருடைய வீட்டை முற்றுகையிட்டனர் சி.பி.ஐ  அதிகாரிகள்.

மேலும் படிக்க : ப.சிதம்பரம் வழக்கு  தொடர்பான லைவ் அப்டேட்டினை உடனுக்குடன் படிக்க

மேல்முறையீட்டு மனு விவகாரம்

21ம் தேதி காலையிலேயே அவசர வழக்காக ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி விசாரணை செய்யும் மனுக்கள் பட்டியலில் சிதம்பரத்தின் மனு இடம் பெறவில்லை.

21/08/2019 : காலை 11 மணி : தலைமை நீதிபதி தான் இவ்வழக்கை விசாரணை செய்து அதில்  முடிவினை மேற்கொள்வார் என்று நீதிபதி ரமணா அறிவித்தார்.

21/08/2019 : காலை 11:30 மணி : அயோத்தி வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவசர வழக்காக இவ்வழக்கினை விசாரிக்க இயலாது என்று தலைமை நீதிபதி அமர்வு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

21/08/2019 : காலை 11:30 மணி : தேடப்படும் குற்றவாளியாக லுக்-அவுட் சுற்றறிக்கையை ப.சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பித்தது அமலாக்கத்துறை.

21/08/2019  : பகல் 12 மணி : சி.பி.ஐ தரப்பில் இருந்து கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐயும் இந்த வழக்கில் விசாரணை செய்து வருவதால் அந்த அமைப்பின் தரப்பு நியாயத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் குறித்த தீர்ப்பினை வழங்கக் கூடாது என்று கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

21/08/2019  : பகல் 12.30 மணி : லுக் அவுட் மனு பிறப்பிக்கப்பட்ட பிறகு மீண்டும் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டது சி.பி.ஐ

21/08/2019  : மதியம் 2 மணி :  மேல் முறையீட்டு மனுவில் குறை

மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு வரவில்லை. அதற்கான காரணங்களை அறிய விளக்க பதிவாளரை நீதிமன்ற அறைக்கு வர நீதிபதி ரமணா உத்தரவிட்டார். அப்போது ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்ப்பட்ட மனுவில் குறைப்பாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. குறைகள் நீக்கப்பட்டால் மட்டுமே விசாரணை என்று நீதிபதி ரமணா அறிவித்தார்.

மேலும் படிக்க : இதுவரை ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் நடைபெற்றது என்ன?

21/08/2019 : மாலை 5 மணி : என்னிடம் விசாரணைக்கே வராத வழக்கில் நான் என்ன  முடிவு கூற முடியும் என்று கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய், முன் ஜாமீன் வழக்கினை நாளை (23/10/2019) விசாரிப்பதாக அறிவித்தார்.

21/08/2019 : இரவு 8 மணி : ஒரு நாள் முழுவதும் சிதம்பரம் எங்கே இருக்கின்றார் என்ற தகவல்கள் யாருக்கும் தெரியாத நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ப.சிதம்பரம். நான் தலைமறைவாகவில்லை என்றும் இதுவரை ஐ.என்.எக்ஸ் வழக்கில் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.

21/08/2019 : இரவு 8 –  9 மணி : காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நேராக தன்னுடைய வீட்டுக்கு சென்றார் ப.சிதம்பரம். சி.பி.ஐ வெகுநேரம் வாசலில் நின்று வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்டும் கிடைக்காததால் நேற்று இரவு 8 மணிக்கு பிறகு சி.பி.ஐ, ப.சிதம்பரம் வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றது. பின்பு அவர் அங்கு கைது செய்யப்பட்டார்.

21/08/2019 : இரவு 10 மணி  21ம் தேதி  இரவில் இருந்து ப.சிதம்பரம் டெல்லியில் இருக்கும் சி.பி.ஐ. அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவருடைய முன் ஜாமீன் மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. ப.சிதம்பரத்தின் கைதுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Inx media case p chidambarams arrest timeline

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X