Advertisment

INX case updates : ப.சிதம்பரத்திற்கு ஆக.,30 வரை சிபிஐ காவல் - சிறப்பு நீதிபதி உத்தரவு

ஐந்து நாட்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

P Chidambaram INX media case live updates : ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Advertisment

P Chidambaram INX media case updates

முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டத்தை தொடர்ந்து ப.சிதம்பரத்தின் வீட்டு சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர் சி.பி.ஐ. பின்பு அவர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். இன்று அவர் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் தன் மீது பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை நீக்க, சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் விவகாரத்தில் முன் ஜாமீன் என மூன்று முக்கிய மனுக்களை ப.சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்துள்ளது. இம்மூன்று வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகிறது.

என்ன செய்யப் போகின்றது அமலாக்கத்துறை?

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் விவாகரத்தில், அமலாக்கத்துறை தங்கள் தரப்பு விவாதங்களை முன் வைக்க உள்ளது. ப.சிதம்பரம் மற்றும் அவருடைய சொந்தங்களுக்கு அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், ஃப்ரான்ஸ், க்ரீஸ், மலேசியா, மோனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெய்ன் மற்றும் இலங்கை என பல நாடுகளில் சொத்துகள் இருப்பதை விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : ஐ.என்.எக்ஸ் வழக்கில் இது வரை நடைபெற்றது என்ன?

Live Blog

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் விவாகரத்தில், அமலாக்கத்துறை தங்கள் தரப்பு விவாதங்களை முன் வைக்க உள்ளது.














Highlights

    20:06 (IST)26 Aug 2019

    ப.சிதம்பரத்திற்கு ஆக.,30 வரை சிபிஐ காவல் – சிறப்பு நீதிபதி உத்தரவு

    5 நாட்கள் சிபிஐ காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று ( ஆகஸ்ட் 26ம் தேதி) மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பு, சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் கோரியது. இதை ஏற்ற சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார், சிபிஐயின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை தொடர்ந்து, வரும் 30ம் தேதி வரை, சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    16:51 (IST)26 Aug 2019

    மேலும் 5 நாள் கேட்கும் சிபிஐ

    சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம். மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பை கோர சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காவல் நீட்டிப்பு மனு தாக்கல் செய்தால் அதை எதிர்க்க தயாராகிறது சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு

    16:43 (IST)26 Aug 2019

    விசாரணை நாளை ஒத்திவைப்பு

    ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    15:40 (IST)26 Aug 2019

    அமலாக்கத் துறை அளித்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என தெரியாத நிலையில், எப்படி வாதிட முடியும்? கபில் சிபில்

    உயர்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அமலாக்கத் துறை அளித்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என தெரியாத நிலையில், எப்படி வாதிட முடியும் என கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசிய விட்டதாக  கபில்சிபல் குற்றம்சாட்டிய நிலையில், குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல்  துஷார் மேத்தா அதனை மறுத்தார். மேலும், ப.சிதம்பரம் வழக்கறிஞர்களுக்கு அளித்த போது தான், தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    15:03 (IST)26 Aug 2019

    கபில் சிபல் வாதம்

    பாஸ்கர் ராமன், கார்த்தி, இந்திராணி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும், கார்த்தி சிதம்பரத்திற்கு கொடுப்பதற்காக ரூ.3.5 கோடி அளவுக்கு போலி பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது, அந்த பணம் எங்கே? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கபில் சிபல். அதோடு, ட்வான்டேஜ் நிறுவனத்தில் கார்த்தி இயக்குநரோ, பங்குதாரரோ இல்லை என குறிப்பிட்ட கபில் சிபில்,  அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் இருந்த 6 அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கார்த்தியை அணுகியதாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்

    13:56 (IST)26 Aug 2019

    சி.பி.ஐயின் முதல் தகவல் அறிக்கையை தவிர சிதம்பரத்திற்கு எதிராக என்ன உள்ளது ? - நீதிபதி கேள்வி

    சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையை தவிர சிதம்பரத்திற்கு எதிராக என்ன ஆவணங்கள் உள்ளன என நீதிபதி பானுமதி சி.பி.ஐ தரப்பிடம் கேள்வி எழுப்பினார். சிதம்பரத்திடம் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது என துஷார் மேத்தா வாதம்.

    13:08 (IST)26 Aug 2019

    கபில் சிபில் விவாதம்

    சிதம்பரத்தின் பெயரில் வாங்கப்பட்ட ஒரு சொத்தை காட்டினாலும் நாங்கள் இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்கின்றோம் என கபில் சிபில் வாதம். மின்னஞ்சல்கள், சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறையினர் கண்டறிந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். ஆனால் இது குறித்து ஒரு முறையும் கடந்த 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறையினர் அறிவிக்கவில்லை என்றும் எப்போது ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் கபில் சிபில்.

    12:44 (IST)26 Aug 2019

    அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனு விசாரணை

    அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் என்ன உள்ளது என்றே தெரியாத போது அது குறித்து எப்படி வாதிட முடியும் என்று ப.சிதம்பரம் தரப்பு கேள்வி

    12:29 (IST)26 Aug 2019

    முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். சி.பி.ஐ வழக்கில் உரிய நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி. முன்ஜாமீன் ரத்துக்கு எதிரான மனுவை ஜாமீன் வழங்க கோரும் மனுவாக கருத முடியாது என்றும் நீதிபதி பானுமதி அறிவிப்பு.

    12:08 (IST)26 Aug 2019

    முன் ஜாமீன் மேல்முறையீட்டு மனு விசாரணை துவக்கம்

    ஐ.என்.எக்ஸ் வழக்கில், ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து பதியப்பட்ட மேல் முறையீட்டு மனு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    11:41 (IST)26 Aug 2019

    சி.பி.ஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு - இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை

    சி.பி.ஐ காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு - தலைமை நீதிபதி விசாரணைக்கு இன்று வரவில்லை என கபில் சிபில் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து இன்று விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த மனு விசாரணைக்கு வரவில்லை என்று நீதிபதி பானுமதி அறிவித்ததாக கபில் சிபில் அறிவிப்பு.

    11:33 (IST)26 Aug 2019

    பிரமாண பத்திரத்தில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

    ப.சிதம்பரம் மற்றும் அவருடைய சொந்தங்களுக்கு அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், ஃப்ரான்ஸ், க்ரீஸ், மலேசியா, மோனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெய்ன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சொத்துக்கள் உள்ளதையும், வங்கிக் கணக்குகள் உள்ளதையும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    11:32 (IST)26 Aug 2019

    பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

    சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் குவித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது, அமலாக்கத்துறை “ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினர்கள், மோசடி செய்யப்பட்ட பணத்தை வைத்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகின்றனர். அது குறித்த விரிவான விசாரணையை சி.பி.ஐ மேற்கொண்டு வருகிறது” என அமலாக்கத்துறை அறிவித்தது.

    இது குறித்த முழுமையான அறிக்கையை இன்று தாக்கல் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், இரண்டு தனி நபர்கள், சிதம்பரத்தின் நேரடி ஏஜெண்ட்டுகளாக செயல்பட்டு அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர், ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைகள் உட்பட” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தின் கூட்டாளிகள் ஆதாரங்களை அழிக்க முட்படுவது மட்டுமின்றி சாட்சிகளை திசை திருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமலாக்க்கத்துறை தரப்பு அறிவித்துள்ளது.

    P Chidambaram
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment