Advertisment

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மக்களவை மற்றும் மாநிலங்களவை எப்போது கூடுகிறது?

மாநிலங்களவை ஜூன் 20ம் தேதி துவங்கி ஜூலை 26ம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parliamentary Sessions 2019

Parliament

Parliamentary Sessions 2019 : நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது பாஜக. 17வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு வருகின்ற ஜூன் 17ம் தேதி மக்களவை கூடுகிறது.

Advertisment

ஜூன் 17ம் தேதி தொடங்க இருக்கும் கூட்டத்தொடரில் முதல் 2 நாட்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள்.

இந்த பதவிப் பிரமாணம் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி முன்னிலையில் நடைபெறும்.

பின்னர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 19ம் தேதி நடைபெறும்.

ஜூன் 20ம் தேதி இரண்டு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகின்றார். ஜூன் 20ம் தேதி அன்றே மாநிலங்களவை கூடுகிறது.

ஜூலை 4ம் தேதி எக்கானமிக் சர்வே சமர்பிக்கப்படும்.

ஜூலை 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அரசின் பட்ஜெட்டினை தாக்கல் செய்வார்.

மாநிலங்களவை ஜூன் 20ம் தேதி துவங்கி ஜூலை 26ம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மோடி முதல் தேபஸ்ரீ வரை: 58 அமைச்சர்கள் பட்டியல், இலாகாக்கள்

Nda
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment