Passenger cars sale slowdown deepens : கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2,73,748 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதில் இருந்து 17.54% விற்பனை முற்றிலுமாக சரிந்து இந்த வருடத்தில் 2,25,732 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த 12 மாதங்களில் 11 மாதங்கள் தொய்வான விற்பனையையே கண்டு வருகிறது இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தை.
கடந்த அக்டோபர் மாதம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கைப் போன்று விற்பனை சிறிது வேகம் பெற துவங்கியது. ஆனாலும் தொடர்ந்து 2 சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை இந்தியாவில் மந்தமாகிவருகிறது. இந்திய ஆட்டோமொபைல் மெனுஃபேக்சர்கள் சொசைட்டி (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பேசஞ்சர் கார்கள் இந்த மாதம் 24. 97% சரிவினையும், இரண்டு சக்கர வாகனங்கள் 11.69% சரிவையும் சந்தித்துள்ளது என்று கூறுகிறது.
அதே போன்று கமர்சியல் சேல்ஸ் 12.3% வரை குறைந்துள்ளது . மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 8.8% குறைந்துள்ளது. மொத்தமாக 22,79,186 என்ற விற்பனையில் இருந்து (ஜூன் 2018) 19,97,952 என்ற எண்ணிக்கையில் சரிவடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பெறும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு இது என்பதை தரவுகள் உறுதி செய்கின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :
இந்த காலாண்டில் பேசஞ்ர்கள் வேகில்கள் விற்பனை 23.32%மாகவும். பேசஞ்சர் கார்கள் 4.23%மாகவும், யுட்டிலிட்டி வேன்கள் மற்றும் வாகனங்களின் விற்பனை 25.66% மாகவும் குறைந்துள்ளது.
விற்பனை மந்தத்திற்கு காரணம் என்ன?
சிறு நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கான க்ரெடிகள் குறைக்கப்பட்டது, சந்தையின் லிக்குவிடிட்டி ஸ்க்வீஜ் ஆனது போன்ற காரணங்களால் விற்பனையில் மந்தம் நிலவி வருகிறது. SIAM தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், இண்டஸ்ட்ரி இதைவிட மோசமான ஒரு சறுக்கலை எப்போதும் சந்தித்ததே கிடையாது. இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால் அது பெரும் ஆபத்தில் தான் போய் முடியும். நடைபெற்று முடிந்த பட்ஜெட் மூலமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதை நாங்கள் அறிவோம். அதனால் இந்த மந்த நிலை கொஞ்சம் சீராகலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஹூண்டாய் மோட்டர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் எஸ்.எஸ். கிம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலில் “நிறைய வங்கிகள் முன்பு போல் வாகனக்கடன்கள் வழங்குவதில்லை. இதனால் நிறைய விநியோகஸ்தர்கள் பாதிப்புகளை சந்திக்கின்றனர். வாகனக்கடன் தற்போது எளிமையாக்கப்பட்டால் நிச்சயம் இந்த பிரச்சனைக்கான தீர்வு காணலாம்” என்று கூறினார்.
மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…