PM-KISAN Scheme : இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய பங்கு வகித்தது, விவசாயிகளுக்கான 6000 ரூபாய் நிதித்திட்டம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 ரூபாய் என்று அந்த நலத்திட்டம் பற்றி கூறப்பட்டிருந்தது.
PM-KISAN Scheme to launch today in Gorakhpur
அந்த திட்டத்தை இன்று அறிமுகப்படுத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தின் வாயிலாக சுமார் 12 கோடி சிறுகுறு விவசாயிகள் பயனடைவார்கள். 75,000 கோடி ப்ரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) திட்டத்தினை இன்று உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் கோரக்பூரில் அறிமுகம் செய்ய உள்ளார்.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்குள் மேலும் ஒரு கோடி நபர்கள் பயனடைவார்கள். நாளை இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாகும். ப்ரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் நாளை கோரக்பூரில் அறிமுகம் செய்ய உள்ளோம் என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த திட்டத்திற்காக 3.2 கோடி போர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 84 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேசத்தில் இருக்கும் 12 கோடி விவசாயிகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் முதற்தவணையை செலுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் அறிமுகமானது விவசாயிகளுக்கான நலத்திட்டம்... பியூஷ் கோயல்
உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது சுமார் 1.7 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் இந்த நலத்திட்டத்தின் முதல் தவணையை செலுத்த உள்ளார்.
கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் 3ல் ஒரு பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசுகள், பப்ளிக் ஃபினான்சியல் மேனேஜ்மெண்ட் திட்டத்தின் கணக்கெடுப்பின் படி சுமார் 3.2 கோடி விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன.
55 லட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதம் இருக்கும் 2.5 கோடி விண்ணப்பங்களில் சுமார் 1.7 கோடி பேருக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படும். 84 லடம் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து சுமார் 67% விண்ணப்பங்கள் அனுப்பபட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் 2% வரை மட்டுமே விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் 30% விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் 0.03%, மத்தியப் பிரதேசம் 0.01% மற்றும் கர்நாடகா 0.6% என்ற அளவிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளது. மேற்கு வங்கம் இதுவரை எதுவும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற காரணத்தால் இது குறித்து தேர்தல் ஆணையர்களாக இருந்தவர்களிடம் வினவிய போது மாடல் கோட் ஆஃப் காண்டாக்ட்டில் அடையாளம் காணப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே இந்த நிதி உதவி அளிக்கப்படும். புதிதாக இதில் யாரும் பயனடைய மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
உ.பியின் விவசாயத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இது குறித்து கூறிய போது, தேர்தலை காரணம் காட்டி இந்த நலத்திட்டங்களை யாராலும் தடுக்க இயலாது. அப்படி ஏதும் நடைபெறாமல் இந்த திட்டங்களை மக்கள் மத்தியில் மாநில அரசு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.