/tamil-ie/media/media_files/uploads/2018/11/Modi-Sad-getty-April-29.jpg)
நரேந்திர மோடி ஒரு அனகொண்டா
நரேந்திர மோடி ஒரு அனகோண்டா விமர்சனம் : ஒரு சிறு விமர்சனும் கூட பெரிய அளவில் சர்ச்சையாகிவிடும் என்பது எவ்வளவு சரியாக அமைந்திருக்கிறது. சனிக்கிழமை (03/11/2018) அன்று நரேந்திர மோடி ஒரு மலைப்பாம்பு போல் பொதுத்துறை நிறுவனங்களை முழுங்கிக் கொண்டிருக்கிறார்.
சிபிஐ மற்றும் ஆர்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் அவரின் ஆதிக்கம் குறித்து ஆந்திர மாநிலத்தின் நிதி அமைச்சர் ஏ. ராமக்கிருஷ்ணுடு விமர்சனம் செய்திருக்கிறார். மோடி எப்படி ஒரு நாட்டின் காப்பாளராக இருப்பார் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதே நேரத்தில் எதிர்கட்சிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் ஜன சேனா கட்சிகளையும் விமர்சித்திருக்கிறார். இவ்விரண்டு கட்சிகளும் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இந்நாட்டைப் பற்றிய எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் வெறும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலேயே குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறியிருக்கிறார்.
பதில் கூறிய பாஜக
ராம கிருஷ்ணுடுவின் கருத்திற்கு பதிலளித்த ஆந்திரமாநில பாஜக தலைவர் லட்சுமிநாராயணா “சந்திரபாபு நாயுடு ஊழல் செய்வதில் தேர்ந்தவர் என்றும், அவர் மீது ஊழல் புகார்கள் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் இருக்கிறார் என்றும்” அவர் கூறியிருக்கிறார்.
அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக எந்த ஆழமும் செல்வார் சந்திரபாபு நாயுடு என்றும், 2017ம் ஆண்டு தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில் பொறுப்பேற்கும் போது மோடியை வாழ்த்தியவர் தற்போது மோடியை குற்றவாளியாக மாற்ற முயற்சிக்கிறார் என்று விமர்சித்திருக்கிறார் லட்சுமிநாராயணா.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தன்னுடைய ஆதரவினை காங்கிரஸ்ஸிற்கு அளிப்பதற்காக டெல்லி சென்றார் சந்திராபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை அன்று அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.