PM Narendra Modi Book : சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பது போல், தற்போது டெல்லியிலும் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மோடி புத்தகம் தான்.
PM Narendra Modi Book : கேட்பதற்கே வியப்பாக இருக்கும் இந்த புத்தகத்தில் அப்படி என்ன வியக்கத்தக்க சிறப்பம்சம் ?
மோடியின் சிறு உருவமே புத்தகமாகியிருப்பது தான் இதன் சிறப்பம்சம். புத்தகத்தின் உயரம் 5’7 ஆகும். புத்தகத்தின் பக்கங்கள் 68 - மோடியின் வயது. 77 கி.கி எடை கொண்ட நரேந்திர மோடியை மையமாக கொண்டே புத்தகத்தின் எடையும் அமைந்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/modi-book-759.jpeg)
இந்த புத்தகத்தின் உள்ளே இருக்கும் கருத்து தான் என்ன ?
மோடி இது நாள் வரையில் பேசிய முக்கியமான உரைகளில் இடம் பெற்றிருக்கும் பொன் மொழிகள் மற்றும் கருத்துகளை 68 பக்கங்களில் அழகாக அடித்து வெளியிட்டுள்ளனர் இந்த புத்தக வடிவமைப்பாளர்கள்.
இது குறித்து இந்த புத்தகத்தை எழுதிய அபூர்வா ஷா என்ன சொல்கின்றார் ?
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அபூர்வா ஷா இது நாள் வரையில் புத்தகங்கள் வடிவமைப்பு, பிரிண்டிங், மற்றும் பைண்டிங் வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்.
தற்போது தான் புத்தகத்தை பிரசுரம் செய்தது இதுதான் முதல் முறை. இந்த புத்தகத்தை நாங்கள் ஏற்கனவே அஹமதாபாத் புத்தக கண்காட்சியில் வெளியிட்டிருந்தோம். அங்கு நல்ல வரவேற்பு இருந்தது.
மக்கள் இந்த புத்தகத்தினை பார்க்கும் போது கட் அவுட் என்று நினைத்தார்கள். ஆனால் நாங்கள், அது புத்தகம் என்று கூறியவுடன் அதனை ஆதரித்து புத்தகங்ளை வாங்கிச் செல்கிறார்கள் என்று கூறியுள்ளார் அபூர்வா ஷா.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/modi.jpeg)
கடந்த வருடம் மஹாவீர் அவர்களின் பொன்மொழிகளை சிறிய புத்தகமாக வெளியிட்டேன். இந்தியாவில் மிகச்சிறிய புத்தகம் என்ற பெயரை பெற்றுள்ளது இந்த புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மோடியிடம் இந்த புத்தகத்தை கொண்டு சேர்க்க முயற்சித்தேன். ஆனால் என்னால் இயலவில்லை. இந்த புத்தக்கம் மோடிக்கானது இல்லை. மக்களுக்கானது. இந்த புத்தக்கத்தின் மூலம் மோடி கூறிய நற்செய்திகளை மக்களிடம் சேர்ப்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார் ஷா.
புத்தகம் வாசிப்பவர்கள், இந்த கிரியேட்டிவ் அனைத்தும் சரி தான் ஆனால் இதன் விலைதான் ரூ. 250 கொஞ்சம் அதிகம் என்று கூறியுள்ளார். உலக புத்தக கண்காட்சி டெல்லியில் ப்ரகதி மைதானத்தில் ஜனவரி 13ம் தேதி வரையில் நடைபெறும்.
மேலும் படிக்க : இப்படியொரு கல்யாண பத்திரிக்கையா? மோடிக்காக ரூம் போட்டு யோசிச்சிருகாங்க!