PM Modi Independence Day Speech: சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பேசினார். விவசாயிகளின் வருமானம் 2022-க்குள் இரு மடங்காக உயர நடவடிக்கை, 2022-க்குள் விண்வெளியில் இந்தியர் ஒருவரை கால் பதிக்கச் செய்வது ஆகியவற்றை குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறை பணி நியமனங்களுக்காக பெண்களுக்கு தனி ஆணையம் அமைக்கும் அறிவிப்பையும் மோடி வெளியிட்டார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதை கொண்டாடும் 72-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பாரம்பரியம் மிக்க செங்கோட்டையில் இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றுகிறார்.
72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’... எங்கே? எப்படி? To Read, Click Here
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியை காலை 6.35 மணி முதல் தூர்தர்ஷன் தேசிய அலைவரிசை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. தூர்தர்ஷன் ‘யு டியூப்’ சேனலும் நேரடியாக துல்லியமான தரத்தில் ஒளிபரப்பு செய்கிறது.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 5-வது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். நரேந்திர மோடியின் உரையில் என்ன சொல்ல இருக்கிறார்? என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது
72 independence day of india 2018, PM Narendra Modi Speech Live Updates: சுதந்திர தின விழா, பிரதமர் நரேந்திர மோடி உரை ‘லைவ்’
8: 55 AM: 8:55 மணிக்கு மோடி தனது பேச்சை நிறைவு செய்தார். பாதுகாப்புத் துறை பணிகளில் பெண்களை அமர்த்த தனி ஆணையம் என்கிற அறிவிப்பை மோடி வெளியிட்டார்.
8:50 AM: பினாமி ஒழிப்புச் சட்டம் அமல் செய்யப்பட்டதை குறிப்பிட்ட மோடி, நாட்டின் வரி செலுத்துவோருக்கு தனது நன்றியை தெரிவித்தார். வரி செலுத்துகிறவர்களால்தான் மக்களை வறுமையில் இருந்து மீட்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவதாக சொன்னார்.
8:40 AM: ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மூலமாக இளைஞர்களின் செயல்பாடு மேம்பட்டு வருவதாக குறிப்பிட்ட மோடி, இளைஞர்களுக்கும் மக்களுக்கும் புதிய தொழில்கள் தொடங்க அரசு கடன்கள் வழங்கி வருவது குறித்து குறிப்பிட்டார்.
8:32 AM: தூய்மை பாரத திட்டத்தின் வெற்றி குறித்தும், சர்வதேச நிறுவனங்கள் அதை அங்கீகரித்திருப்பது குறித்தும் பெருமிதத்துடன் பேசினார்.
8:30 AM: மீன் உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியா விரைவில் முதல் இடத்தைப் பிடிக்கும் என குறிப்பிட்ட மோடி, தேன் உற்பத்தி இரு மடங்காக உயர்ந்திருப்பதையும், சர்க்கரை உற்பத்தி மும்மடங்காக அதிகரித்திருப்பதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Addressing the people of India from the ramparts of the Red Fort. Watch. https://t.co/thwrgd8nb5
— Narendra Modi (@narendramodi) 15 August 2018
8:20 AM: விண்வெளித்துறையில் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசிய மோடி, ‘2022-க்குள் இந்தியாவின் மகன் அல்லது மகள் மூவண்ணக் கொடியுடன் விண்வெளியில் போய் இறங்குவார்’ என்றார்.
8:15 AM: 2022-க்குள் விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயர வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டார் மோடி.
8:00 AM : ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவுதினம் அடுத்த ஆண்டு வர இருப்பதை நினைவு கூர்ந்த மோடி, போர் வீரர்களுக்கு தனது அஞ்சலியை தெரிவித்ததுடன், ஜாலியன் வாலாபாக் நிகழ்வு நாட்டு மக்களுக்கு உத்வேகம் தருவதாக குறிப்பிட்டார்.
7: 45 AM: ஓபிசி, எஸ்.சி-எஸ்.டி கமிஷன்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கொடுத்து, தலித்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் மேம்பாட்டுக்கு தனது அரசு பணியாற்றி வருவதாக மோடி குறிப்பிட்டார்.
7:35 AM : பிரதமர் மோடி சுதந்திர தின உரையை தொடங்கினார். நாடு தன்னம்பிக்கை ததும்ப திகழ்வதாகவும், சீரான முறையில் புதிய உச்சங்களை தொட்டு வருவதாகவும் தனது பேச்சின் ஆரம்பத்தில் மோடி குறிப்பிட்டார்.
Many parts of the nation witnessed a good monsoon but at the same time parts of India have been affected by flooding. My thoughts are with the families of those who lost their lives due to floods in various parts of India: PM @narendramodi
— PMO India (@PMOIndia) 15 August 2018
7:30 AM: பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்ற இருக்கும் செங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தேசியக் கொடியேற்றி வைத்தார். முன்னதாக கடற்படை கமாண்டர் ஜெகன் தலைமையில் பிரதமருக்கு அணி வகுப்பு மரியாதை செய்யப்பட்டது. அதில் முப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
7:25 AM: சுதந்திர தின விழா நடைமுறைகள் தொடங்கின. டெல்லி ராஜ்காட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
Delhi: Prime Minister Narendra Modi pays tribute to Mahatma Gandhi at Rajghat #IndependenceDayIndia pic.twitter.com/Yko8pgJlUX
— ANI (@ANI) 15 August 2018
7:00 AM: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, உரையாற்ற இருக்கிறார். முன்னதாக ட்விட்டரில் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.