Narendra Modi Swearing in Ceremony 2019 Live Updates: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, பெரும் வெற்றி பெற்றது பா.ஜ.க
Honoured to serve India! Watch the oath taking ceremony. https://t.co/GW6u0AfmTl
— Narendra Modi (@narendramodi) 30 May 2019
இதனால் இரண்டாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றார் நரேந்திர மோடி. இந்நிலையில் 30ம் தேதி இரவு 7 மணிக்கு இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் இணைந்து அமைச்சரவையில் இடம்பெறுபவர்களும் பதவியேற்றனர்.
மோடி பதவியேற்பு விழா : 6000 விருந்தினர்கள் பங்கேற்கும் கோலாகல விழா
6000 விருந்தினர்கள் கலந்துக் கொள்ளும், இவ்விழா ராஷ்ட்ரபதி பவனில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுகவிற்கு இடமில்லை : பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 30ம் தேதி பதவியேற்றது. இந்த அமைச்சரவையில், அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அல்லது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை.
HighlightsDeleteEdit
PM Narendra Modi swearing-in ceremony LIVE Updates: வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பின் தலைவர்கள், மொரிசியஸ், கிர்கிஜ் குடியரசு நாடுகளின் தலைவர்களுக்கு இதில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Web Title:Pm narendra modi swearing in ceremony live
தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் ஆக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்
1. சந்தோஷ் குமார் கங்க்வார்
2. ராவ் இந்தர்ஜித் சிங்
3. ஸ்ரீபத் யேசோ நாயக்
4. டாக்டர் ஜிதேந்திர சிங்
5. ஆர்.கே.சிங்
6. கிரண் ரெஜிஜூ
7. பிரலாத் சிங் படேல்
8. ஹர்தீப் சிங் புரி
9. மன்சுக் மாண்டாவியா
24 கேபினட் அமைச்சர்கள் உட்பட இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பதவியேற்றுள்ளனர்.
24 கேபினட் அமைச்சர்கள் உட்பட இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பதவியேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 30ம் தேதி பதவியேற்றது. இந்த அமைச்சரவையில், அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அல்லது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை.
1. பிரதமர் நரேந்திர மோடி2. ராஜ்நாத் சிங்3. அமித் ஷா4. நிதின் கட்கரி5. சதானந்த கவுடா6. நிர்மலா சீதாராமன்7. ராம்விலாஸ் பஸ்வான்8. நரேந்திரசிங் தோமர்9. ரவிசங்கர் பிரசாத்10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்)11. தாவர்சந்த் கெலோட்12. ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்)13. ரமேஷ் பொக்ரியால்14. அர்ஜூன் முன்டா15. ஸ்மிரிதி இரானி16. ஹர்ஷவர்தன்17. பிரகாஷ் ஜவடேகர்18. பியூஷ் கோயல்19. தர்மேந்திர பிரதான்20. முக்தார் அப்பாஸ் நக்வி21. பிரகலாத் ஜோஷி22. மகேந்திரநாத் பாண்டே23. அரவிந்த் சாவந்த்24. கிரிராஜ் சிங் 25. கஜேந்திர சிங் ஷெகாவத் என 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர்களாக தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவ்டேகர் பதவியேற்றனர்
மகன் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றதை டிவியில் கண்ட மோடியின் தாய் ஹீராபென், மகிழ்ச்சியில் கைதட்டினார்.
மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
தமிழகத்திலிருந்து இரண்டு பேர் ( நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஜெய்சங்கர்) மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த சுஷ்மா சுவராஜிற்கு இந்த அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபால், நிதியமைச்சர் பதவி வகித்த அருண் ஜெட்லியும் தமக்கு பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது
மத்திய அமைச்சர்களாக நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமன் பதவியேற்றனர்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்க உள்ள சுஷ்மா சுவராஜ். ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்டோர் ராஷ்டிரபதி பவன் வருகை
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பங்கேற்க போவதில்லை என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். ஒருவருக்கு தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஏதோ அடையாளத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதனால், எனக்கு எவ்வித மனவருத்தமும் இல்லை. இதை பெரிய விசயமாக்க விரும்பவில்லை என நிதீஷ் குமார் கூறினார்.
ராஷ்டிபதி பவனிற்கு ரஜினி வருகை
ராஷ்டிரபதி பவனிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி வருகை
பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்விற்கு பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழச்சி ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது. இதற்காக ராஷ்டிரபதி பவனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் வர துவங்கியுள்ளனர். இதனால், அந்த வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ராஷ்டிரபதி பவன் வந்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர, மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கும் வகையில் கட்சி தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றினார்கள். மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் அவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டும் வந்தனர். இதில் பலர் மரணமடைந்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகத்தை அங்கீகரிக்கும் பொருட்டு கட்சி தலைமை, மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் தற்போது டில்லி வந்துள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொள்வர்.
டில்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டிற்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, நெட்டிசன்களிடம் அதிகளவில் உள்ளது. டிரென்டிங்கில் ரவீந்திரநாத் குமாரின் பெயரும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அவரது சொந்த தொகுதியான வாரணாசியை (காசி) சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு இடம் உண்டு என்று குஜராத் பா.ஜ. தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவ், நேபாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி ஆகியோர் டில்லி வருகை.
இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கான அமைச்சர்களை தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
PM MODi swearing in : இந்தியாவில் ஒரு அமைச்சரவை எப்படி உருவாக்கப்படுகிறது
கர்நாடகாவில் இருந்து எம்பியான சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.
இவர்கள் தவிர ஹூப்ளி மாவட்டம் தர்வத் தொகுதி எம்.பி., பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிலாகவி எம்.பி., சுரேஷ் அங்கடி ஆகிய 2 பேருக்கும் இன்று மாலை மோடியை சந்திக்க வர அழைப்பு வந்துள்ளது.
மக்களவை தற்காலிக சபாநாயகராக மூத்த எம்.பி. சந்தோஷ் கங்வார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிர்மலா சீத்தாராமன், ரவி்சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, அர்ஜூன் மேக்வால், ராம்தாஸ் அத்வாலே, ஹர்சிம்ரத் கவு், தவார் சந்த் கெலாட், அர்விந்த் சவந்த், ஜிதேந்திர சிங், பபுல் சுப்ரியோ, சதானந்த கவுடா, கிரெண் ரெஜிஜூ, ராஜ்யவர்தன் சிங் ரதோர், கிஷான் ரெட்டி, பிரலஹாத் படேல், சுரேஷ் அங்காடி, கைலாஷ் சவுத்ரி, கிஷன்பால் குஜ்ஜார், புருசோத்தம் ருபாலா, மன்சுக் மாண்டேவியா, பிரல்ஹாத் ஜோஷி, தேபாஸ்ரீ சவுத்ரி, கஜேந்திர ஷெகாவத், ரத்தன் லால் கட்டாரியா, ரமேஷ் போக்ரியால், அர்ஜூன் முண்டா, ராமேஸ்வர் தேலி, ஸ்ரீபத் நாயக், ரேணுகா சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மோடி பதவியேற்பு விழா : பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் சர்வதேச தலைவர்கள் - ஒரு பார்வை
நரேந்திர மோடி, ஜனாதிபதிமாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இவர்களுடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியல் நரேந்திர மோடி, ஜனாதிபதிமாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இவர்களுடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியல் ராஜ்நாத் சிங். சுஷ்மா சுவராஜ் , பியூஸ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்டோருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக-விடமிருந்த வந்த அழைப்பில் அமித்ஷா உள்துறை அமைச்சராவதை உறுதிப்படுத்தியது என்கிறார் டி.வி.சதானந்த கவுடா
Tamilnadu latest news today live : ஒற்றை காலில் நின்ற ஓபிஎஸ்! மத்திய அமைச்சராகிறாரா ரவீந்திரநாத் குமார்?
அமைச்சரவை குறித்து பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் விவாதித்து வந்த நிலையில் நிதியமைச்சராக யார் பொறுப்பு ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களுக்கு அதிகரித்திருக்கிறது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம் பெற மாட்டார் என முன்பே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் வகித்த, நிதியமைச்சர் பொறுப்பு அமித்ஷாவுக்கு செல்லலாம் என்கிறது நெருங்கிய வட்டாரம்.
இன்று மாலை 7 மணிக்கு நடக்கும் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் அமைச்சரவையில் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் தனது சகாக்களுடன் இரண்டாவது முறையாக பதவையேற்கிறார் பிரதமர் மோடி. இதில் 6000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் மோடியின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கும் மோடி, மகாத்மா காந்தியின் நினைவிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடம், போர் நினைவுச் சின்னம் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பாஜக தலைவர் அமித் ஷா உடன் இருந்தார்.