ஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி - மோடி அறிவிப்பு

இன்று காலையில் ஹெலிகாப்டர் மூலமாக புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் மோடி. ஒடிசா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் உடன் இருந்தனர்.

PM Narendra Modi Visits Cyclone Fani Affected Area : ஃபானி புயல் வெள்ளியன்று (03/05/2019) கரையைக் கடந்தது. அன்று காலை முதல் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பலத்த சேதரங்களை சந்தித்துள்ளது ஒடிசா மாநிலம். இன்று வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்வதாக அறிவித்திருந்தார் பிரதமர் மோடி.

ஒடிசா முதல்வர் மற்றும் ஆளுநர் உடன் இருந்தனர்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் கணேஷி லால்,  ஆகியோருடன் வானில் இருந்தவாறே புயல் சேதாரங்களை கண்காணித்து வந்தார். ஆய்வு மேற்கொண்ட மோடி அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். ஃபானியால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புயலால் பூரி மாவட்டம் பெரும் சேதாரத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

PM Narendra Modi Visits Cyclone Fani Affected Area

அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மோடி (நன்றி : ANI)

முன்கூட்டியே புயல் அபாயம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இன்று காலையில் இருந்து மின்சார இணைப்பு, நெட்வொர்க் இணைப்பு ஆகியவற்றை சரி செய்து வழங்கும் நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க : ஃபனியின் பிடியில் ஆட்டம் காணும் 850 ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில்…

முதற்கட்டமாக ரூ.381 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்த நிலையில், தற்போது அவசரகால நிதியாக ரூ.1000 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் மோடி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close