POJK Institutes UGC Notification : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது இந்திய பல்கலைக்கழக மானியக் குழு.
எந்த கல்வி நிறுவனங்களுக்கும் அங்கிகாரம் இல்லை
பாகிஸ்தானால் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் Pakistan-occupied Jammu and Kashmir (PoJK) பகுதியில் அமைந்திருக்கும் தொழில்நுட்ப, மருத்துவ கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. அவை எதுவும் இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவாலோ, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (All India Council of Technical Education (AICTE), மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India (MCI)) அமைப்பால் அங்கிகரிகப்படாதவை.
புகழ்பெற்ற ஏ.ஜே.கே மற்றும் கில்கிட் பல்டிஸ்தான் போன்ற கல்விநிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவே இது போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கல்வி பயிலக்கூடாது என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை மற்றும் அறிவுரை தந்துள்ளது.
விரும்பிய இடத்தில் கல்வி பயில்வது மாணவர்களின் அடிப்படை உரிமை
ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாருக் இது குறித்து "மாணவர்கள் இந்த உலகத்தில் எங்கு சென்று வேண்டுமானாலும் படிக்கலாம் என்பது அவர்களின் அடிப்படை உரிமை. அரசியல் மயமாக்கப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கைகள், அந்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது” என்றார்.
Condemn the Govt directive asking students from J&K not to seek admission across LOC for education. Its unfortunate politicisation of education which violates the fundamental right of students to seek education anywhere on the globe. Full Statement: https://t.co/buVIsQxamS
— Mirwaiz Umar Farooq (@MirwaizKashmir) 15 May 2019
ஒவ்வொரு வருடமும் காஷ்மீரில் இருந்து மருத்துவம் படிக்க பாகிஸ்தானிற்கு மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படிக்கின்றார்கள். பாகிஸ்தானிற்கு மருத்துவம் படிக்க வரும் காஷ்மீர் மாணவர்களுக்கு பாகிஸ்தான் சிறப்பு இடஒதுக்கீடு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
POJK Institutes UGC Notification : வேதனை அளிக்கிறது
ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பின் தலைவர் மேலும், காஷ்மீர் மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் இந்த அறிக்கையை உடனடியாக அரசும், யூ.ஜி.சி.யும் திரும்பப்பெற வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான் என்றாலும் அது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தான் அமைந்துள்ளது.
இது குறித்து மாநில அரசுதான் யோசிக்க வேண்டும். ஏற்கனவே சர்வதேச எல்லைப் பகுதியில் வணிகம் தடை செய்யப்பட்டது, சாலைகள் பயன்பாடு முடக்கம் போன்றவற்றால் பெரும் அவதியுற்று வருகிறோம். தற்போது மாணவர்களை அது போன்ற நிலைக்கு ஆளாக்குகிறது அரசு என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.