/indian-express-tamil/media/media_files/Ef9MbKTLFmxx5XpfHuuX.jpg)
ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபப் குமார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் மே 13ஆம் தேதி தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் தொடர்பாக ஸ்வாதி மாலிவாலிடம் போலீஸ் அதிகாரி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குமூலங்களை பெற்றார். ஆங்கிலத்தில் வாசிக்க : Delhi News Today Live Updates: Police seize CCTV DVRs from Kejriwal’s residence in Swati Maliwal assault case
ஸ்வாதி மாலிவால் மீது அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் பிபப் குமார் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தேசிய பெண்கள் ஆணையமும் பிபப் குமாருக்க சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டவில்லை; அவர் பொய் கூறுகிறார் என்ற தலைப்பில் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டன.
அந்தக் காட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இருந்து ஸ்வாதி மாலிவால் சாதாரணமாக வருவது போல் இருந்தது. இதையடுத்து போலீசார் இன்று ஸ்வாதி மாலிவால் தொடர்பாக வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இருந்து டிவிஆர் (வீடியோ பதிவு சாதனம்) ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர்.
ஸ்வாதி மாலிவால் தனது வாக்குமூலத்தில், “அன்றைய தினம் தமக்கு மாதவிடாய் இருந்தது. அச்சமயத்தில் என் வயிற்றிலும் முகத்திலும் குமார் குத்தினார். அடித்து உதைத்தார் எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'வயிறு, மார்பில் உதைத்தார்'- கெஜ்ரிவால் உதவியாளர் மீது ஸ்வாதி மாலிவால் புகார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.