ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் இணைந்து கோவாக்ஸின் என்ற மருந்தினை கண்டுபிடித்துள்ளது. இதனை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து இரண்டு கட்டங்களாக மக்கள் மீது பரிசோதனை செய்யப்படுகிறது. முதற்கட்ட பரிசோதனை ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : கொரோனாவுல செத்து செத்து வெளையாட புதுசா கேம் கண்டுபிடிச்சுருக்காங்க மக்கா…
இந்நிலையில் அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் நிறுவனம் தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. எலி, முயல், கினியா பிக் மற்றும் மைஸ் போன்ற விலங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவில், அவைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு இரு கட்டங்களாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்த மருந்தினை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது மருந்து இதுவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil