Pranab Mukherjee Health Updates: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆபரேஷன் லோட்டஸுக்கு அறுவை சிகிச்சை செய்த அசோக் கெலாட் – சிவசேனா
இன்று காலையில் இருந்து டுவிட்டரில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது.
ஆனால், எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் தலைவருமான அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் "இன்னும் உயிருடன் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "எனது தந்தை ஸ்ரீ பிரணாப் முகர்ஜி இன்னும் உயிருடன் இருக்கிறார், சமூக ஊடகங்களில் முக்கிய பத்திரிகையாளர்களால் பரப்பப்படும் ஊகங்கள் மற்றும் போலி செய்திகள் இந்தியாவில் ஊடகங்கள் போலி செய்திகளின் தொழிற்சாலையாக மாறிவிட்டன என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது" என்று சற்றே காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஒரு விபத்தில் முடிந்துபோன அமெரிக்க கனவுகள்: 19 வயது மாணவியின் பரிதாப மரணம்
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையில் "எந்த மாற்றமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
சுயநினைவின்றி (கோமா நிலையில்) உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil