Shubhajit Roy
Prime Minister Narendra Modi US visit plans : பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21ஆம் தேதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி முதலில் ஹாஸ்டன் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து நியூயார்க் செல்கிறார். நியூயார்க் செல்வதற்கு முன்பு ஹாஸ்டனில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளிகளுடன் “Howdy, Modi” என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் செப்டம்பர் 22ம் தேதி உரையாற்றுகிறார் மோடி.
5 (23 செப்டம்பர் - 28 செப்டம்பர்) நாட்களுக்கு அவர் நியூயார்க் நகரிலும் அதன் பின்பு அவர் வாஷிங்டனில் தன்னுடைய நேரத்தை செலவிட உள்ளார். அமெரிக்க அதிபருடன் 25 மற்றும் 26 தேதிகளில் வெள்ளை மாளிகையில் இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக டெல்லி வட்டாரம் அறிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட பின்பு பராக் ஒபாமாவை சந்திக்க வெள்ளை மாளிகை சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின்பு 2017ஆம் ஆண்டு ட்ரெம்பினை சந்திப்பதற்காக வெள்ளை மாளிகை சென்றார். தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக நிறைவேறும் பட்சத்தில் 3வது முறையாக வெள்ளை மாளிகைக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக ட்ரெம்பினை அவர் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
விருதுகள், சிறப்பு விருந்தினர் - பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கு பெறும் மோடி
பருவ நிலை மாற்றங்களுக்கான பாரிஸ் ஒப்பந்தம் குறித்து செப்டம்பர் 23ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியோ குட்டரெஸ் உரையாற்றுகிறார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார் மோடி.
செப்டம்பர் 24ம் தேதி பில் மற்றும் மெலிண்டா ஃப்வுண்டேசன் வழங்கும் “2019ம் ஆண்டுக்கான க்ளோபல் கோல்கீப்பர்” விருதினை ஸ்வச் பாரத் திட்டத்தை செயல்படுத்தியத்திற்காக மோடி பெறுகின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமைந்திருக்கும் எக்கானமிக் மற்றும் சோசியல் சேம்பரில் செப்டம்பர் 24ம் தேதி ”Leadership Matters: Relevance of Gandhi in the Contemporary World” என்ற தலைப்பின் கீழ், மகத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் சிறப்பு உரையை நிகழ்த்துகிறார் மோடி. காந்தி அமைதிப் பூங்காவை நியூயார்க்கில் திறந்து வைக்கிறார் மோடி. செப்டம்பர் 25ம் தேதி ப்ளூம்பெர்க் க்ளோபல் பிசினஸ் போரமில் உரையாற்றுகிறார் மோடி.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் மோடி - இம்ரான் கான்
பின்னர் 27ம் தேதி நடைபெறும் யூ.என்.ஜி.ஏ எனப்படும் ஐக்கிய நாடுகள் ஜெனரல் அசெம்பெளியில் உரையாற்றுக்கிறார் மோடி. அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றுகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
மேலும் படிக்க : 73வது சுதந்திர தின கொண்டாட்டம் – பிரதமர் மோடி முழு உரை இங்கே!