PM Narendra Modi's Second Term : நடைபெற்று முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் நேற்று ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. நேற்று நடைபெற்ற பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள 6000 நபர்களுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டன. மோடியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முன்னாள் அமைச்சர்கள் யார் யார்?
Prime Minister Narendra Modi's second term : ஆட்சியின் முதல் நாளில் முக்கியத் தலைவர்களை சந்திக்கும் மோடி
பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு நேற்றிரவு 10:15 மணி அளவில், குடியரசுத் தலைவர் மாளிகையில் கிர்கிஸ் நாட்டு அதிபர் சூரோன்பே ஜூன்பெக்காவை சந்தித்து பேசினார் மோடி.
இன்று முதல் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களை சந்திப்பது, பேச்சுவார்த்தை ஆலோசனைகளில் ஈடுபடுவது மற்றும் அந்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என கூடுதல் பொறுப்புகள் மோடியின் கண் முன்னே விரிந்துகிடக்கிறது.
இன்று காலை ஐதராபாத் இல்லத்தில் வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீத் அவரை 10:30 மணிக்கு சந்தித்துப் பேசினார் மோடி. அதனைத் தொடர்ந்து இலங்கைப் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாளப் பிரதமர் கே.பி. ஒலி ஷர்மா, மற்றும் பூடான் பிரதமர் டாக்டர் லோட்டாய் டிஷேரிங் ஆகியோரையும் சந்தித்து பேசிவருகிறார் மோடி.
மோடி பிரதமர் பதவியேற்பு விழா துவங்கி அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் கவனமுடன் கையாளப்பட்டு வருகிறது. இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகள், மத்திய ஆசியா மற்றும் வங்கக் கடற்பரப்பில் அமைந்திருக்கும் நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் தலைவர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார் மோடி.
2014ம் ஆண்டு மோடி சார்க் உறுப்புநாடுகளை பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருந்தார். அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வருகை புதிய நம்பிக்கையினை இரண்டு தரப்பு நாடுகளுக்கும் கொடுத்தது. ஆனால் இம்முறை பாகிஸ்தானை புறக்கணிப்பதற்காக பிம்ஸ்டெக் நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உறுப்புநாடுகளைக் கொண்ட Shanghai Cooperation Organisation (SCO) அமைப்பின் பிரதிநிதியாக ஜீன்பெக்காவை சந்தித்துள்ளார் மோடி. பாகிஸ்தானை உறுப்புநாடாக கொண்டிருக்கும் இந்த அமைப்பின் மாநாடு ஜூன் 13 மற்றும் 14ம் தேதி பிஷ்கேக்கில் அவர் மோடி பங்கேற்க உள்லார்.
ப்ரவாசி பாரதிய திவாஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மொரிசியஸ் பிரதமர் ப்ரவிந்த் ஜூக்நாத் நேற்றைய நிகழ்வில் பங்கேற்றார்.