மருத்துவர்கள் பரிந்துரைப்படி மது விற்பனை – கேரள அரசின் உத்தரவுக்கு தடை

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மதுபான விற்பனை முடங்கியுள்ளது. மதுபானம் கிடைக்காததால் கேரளாவில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் அண்மையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மதுபானத்துக்கு அடிமையானவர்களின் தற்கொலையை தடுக்கும் விதமாக, மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மதுபானம் வழங்க கலால்துறைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். மது பிரியர்களுக்கு 3 லிட்டர் மது விற்பனை செய்யலாம் என்றும், ஆன்லைன் மூலம் மது […]

provide alcohol with doctor prescribe kerala government high court
provide alcohol with doctor prescribe kerala government high court

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மதுபான விற்பனை முடங்கியுள்ளது. மதுபானம் கிடைக்காததால் கேரளாவில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் அண்மையில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


இந்நிலையில் மதுபானத்துக்கு அடிமையானவர்களின் தற்கொலையை தடுக்கும் விதமாக, மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மதுபானம் வழங்க கலால்துறைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். மது பிரியர்களுக்கு 3 லிட்டர் மது விற்பனை செய்யலாம் என்றும், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

மேலும், மதுபானம் கிடைக்காததால் விரக்தி அடைந்தவர்களுக்கு போதை மறுவாழ்வு மையத்தில் இலவச சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, எம்.எல்.ஏ. பிரதாபன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், மது விற்கும் முதல்வரின் திட்டத்துக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Provide alcohol with doctor prescribe kerala government high court

Next Story
பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைPM Narendra Modi video conferencing meetin with all chief minisers, PM Modi, all states chief ministers, கொரோனா தடுப்பு பணிகள், பிரதமர் மோடி முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, CM Edappadi K Palaniswami, corona virus, covid-19, anti coronavirus action, lockdown india, cm meeting with video conference meeting
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express