மக்களோடு அமர்ந்து உணவருந்தி விரதத்தை முடிக்கும் புதுச்சேரி முதல்வர்; 13 ஆண்டுகளாக தொடரும் பழக்கம்
நண்பர் கடையில் அமர்ந்திருந்தப்போது, அங்கு வந்த இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய புதுச்சேரி முதல்வர்; 13 ஆண்டுகளாக அப்பா பைத்திய சாமிக்கு விரதம் இருந்து, மக்களோடு உணவருந்தி விரதத்தை முடிக்கிறார்
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள தனது நண்பரின் வாட்ச் கடையில் அமர்ந்தபடி இன்று மாலை இஸ்லாமிய நண்பர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி ரம்ஜான் வாழ்த்துக்களை கூறி ஆசீர்வாதம் செய்தார்.
Advertisment
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள மெர்குரி வாட்ச் கடை உள்ளது. இந்தக் கடைசியின் உரிமையாளர் சங்கர் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இருவரும் சிறு வயது முதல் இன்று வரை நண்பர்களாக உள்ளனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவரது நண்பர்களுடன் தினந்தோறும் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டுவிட்டு தான் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
அதேபோல இன்று மாலை நாலு மணிக்கு அவரது நெருங்கிய நண்பரின் வாட்ச் கடையில் வந்து அமர்ந்து பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தார். அப்போது இஸ்லாமிய நண்பர்கள் முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தனர். அவர்களுக்கு முதல்வர் ரம்ஜான் வாழ்த்துக் கூறி ஆசீர்வாதம் வழங்கினார்.
இன்று கிருத்திகை, அது மட்டுமல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வருகிறார். அவரது மானசீக உருவான அப்பா பைத்தியசாமி கோவிலில் பிற்பகல் 12 மணிக்கு மேல் பூஜையை முடித்துவிட்டு, அதன் பின்பு தான் மக்களோடு மக்களாக அமர்ந்து தான் விரதத்தை முடிப்பார். இதுதான் புதுச்சேரி மக்கள் முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி மக்கள் முதல்வர் என அன்போடு அழைக்கப்படும் புதுச்சேரி முதல்வருக்கு இஸ்லாமிய நண்பர்களும் ஏராளம். இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் முதல்வருக்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் காலை, மதியம், இரவு என ரம்ஜான் உணவை பரிமாறுவார்கள். ஆனால் இன்று சனிக்கிழமை என்பதால் முதல்வர் காலை முதல் பிற்பகல் வரை விரதம் இருந்து தனது மானசீக குருவான அப்பா பைத்திய சாமி கோவிலில் பிற்பகல் 12 மணிக்கு மேல் பூஜை செய்துவிட்டு அதன் பின்பு சுமார் 200 பேருக்கு வடை பாயாசத்துடன் கூடிய தலைவாழை இலை போட்டு அன்னதானம் செய்வார். அவர்களுடன் இவரும் சேர்ந்து விரதத்தை முடிப்பார். இது கடந்த 13 ஆண்டுகளாக நடக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவர் தீவிரமான முருக பக்தர் இன்று கிருத்திகை என்பதால் கூடுதலாக விரதத்தில் இருந்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil