/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-20T194834.039.jpg)
Puducherry
புதுச்சேரியில் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என 3 வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொதுநலன், குடிமைப்பணி, வணிக மற்றும் தொழில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட தனித்துவமான சாதனைகள், பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: 50க்கு அதிகமான கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல் : பிரிஜ் பூஷன் சரண் சிங் சொத்து மதிப்பு விபரம்
2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதிற்கான தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விவர குறிப்புகள் உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் செய்தித்துறை இயக்குனருக்கு வருகிற ஜூலை 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக அலுவலக நேரத்திற்குள் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுவை யூனியன் பிரதேசத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். இதற்கான படிவத்தினை அரசு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் புதுவை அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.