Pulwama terror attack : பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரில் இருந்து ஜம்முவிற்கு வந்து கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றியது ஜெய்ஷ்-இ-முகமது. இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் இது மிகப்பெரிய பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தானிற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்துகளை திருப்பி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் எழலாம் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
Pulwama terror attack அமெரிக்காவின் நிலைப்பாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் செவ்வாய் கிழமையன்று புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் மிக மோசமான தாக்குதல் என்று அறிவித்திருக்கிறார். மேலும் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை செய்தி வாயிலாக நான் அறிந்து கொண்டேன். மிக விரைவில் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இரண்டு ஆசிய நாடுகளும் ஒன்றாக இருந்தால் எவ்வளவு ந்ன்றாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையில் இருந்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசு துணை செய்தி தொடர்பாளர் ரோபர்ட் பல்லாடினோ இந்தியாவிற்கு அமெரிக்க உறுதுணையாக நிற்கும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானிடம் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானியர்கள் இருந்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் போல்டன் செய்தியாளர்கள் சந்திப்பில் தற்காப்பிற்காக தாக்குதல் நடத்த இந்தியாவிற்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் இந்த தாக்குதலுக்கு பெரிய அளவில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றது.
மேலும் படிக்க : தீவிரவாத தாக்குதலுக்கு முற்றிப்புள்ளி வைக்கப்படுமா ?