Saudi Crown Prince Mohammed bin Salman Visits India : சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். ஒரு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வரும் அவர் பாகிஸ்தானில் இருந்து இன்று இந்தியா வருகிறார். பாகிஸ்தான் சென்ற சவூதி இளவரசர், பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சில ஒப்பந்தங்கள் தீர்மானமாகின. சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானிடம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது பின் சல்மான் எம்.பி.எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறவர். இன்று அவருடைய அமைச்சர்களுடன் இந்தியா வருகை புரிகிறார்.
நாளை நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் அவர். உளவுத்துறை தகவல் பரிமாற்றம், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே இருக்கும் பதட்டமான சூழலை சரிசெய்ய இருப்பதாக இஸ்லமாபாத் மாநாட்டில் சல்மான் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் சவூதி அரேபியா நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.
இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ஸ்ட்ராடெஜிக் பார்ட்னெர்ஷிப் கவுன்சில் அமைக்க திட்டமிட்டுள்ளது. கூட்டு ராணுவம் மற்றும் கப்பற்படை பயிற்சிகள் வருங்காலத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
கடந்த 2016ம் ஆண்டு மோடி சவூதி நாட்டு இளவரசரை ரியாத்தில் சந்தித்தார். இரு நாடுகளும் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்தியாவில் இருந்து சீனாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொள்ள உள்ளார் சல்மான்.
மேலும் படிக்க : அமெரிக்கா போல் அதிரடியில் இறங்குமா இந்தியா ?
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Saudi crown prince mohammed bin salman visits india