கொரோனாவே வந்தாலும் சாதி தான் முக்கியம்! எஸ்.சி பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த நோயாளிகள்…

ஆனால் நீ செய்த உணவினை எங்களால் சாப்பிட முடியாது என இரண்டு நபர்களும் கூறிவிட்டதை தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளிடம் கூறிவிட்டார் லீலாவதி.

By: Updated: April 13, 2020, 10:00:36 AM

Quarantined patients refused take food cooked by scheduled caste woman : உத்திரப் பிரதேசம் மாநிலம் குஷிநகரில், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 2 நபர்கள் பட்டியல் இனப் பெண் சமைக்கும் சாப்பாட்டினை சாப்பிட முடியாது என்று கூறியுள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 5 நபர்கள், அருகே இருக்கும் ஆரம்பப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு உணவினை தயாரித்து வழங்க லீலாவதி என்ற பட்டியல் இனப்பெண்ணை நியமித்து உள்ளனர் அங்கிருக்கும் நிர்வாகம். ஆனால் பட்டியல் இனப் பெண் சமைப்பதை உண்ண முடியாது என்று மறுத்துவிட்டு, 5 நபர்களில் இருவர் தினமும் வீட்டுக்கு சென்று காலை மற்றும் மாலை நேரங்களில் உணவை உண்டுவிட்டு முகாமிற்கு திரும்புகின்றனர்.

இவர்களின் இந்த செய்கை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லீலா கூறுகையில் “ஒவ்வொரு மனிதனும் இங்கு கொரோனா நோய் தொற்றுக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று தான் நான் சமைத்து தர ஒப்புக் கொண்ஏன். அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி தான் உணவும் சமைத்து தருகிறேன். உணவினை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டு திரும்பிவிடுவேன். ஆனால் நீ செய்த உணவினை எங்களால் சாப்பிட முடியாது என இரண்டு நபர்களும் கூறிவிட்டதை தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளிடம் கூறிவிட்டார் லீலாவதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மேலும் படிக்க : மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல்15-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – திமுக அறிவிப்பு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Quarantined patients refused take food cooked by scheduled caste woman

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X