ரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா ? - காங்கிரஸ்

யாராவது அந்த அறிக்கையைப் பார்த்தால் முதலில் பொதுக் கணக்கு குழுவின் தலைவரிடம் காட்டுங்கள் - ராகுல் காந்தி

Rafale Deal CAG Report : ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, நீதிமன்றக் குழுவுடன் கூடிய விசாரணை வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  அதனை விசாரித்த நீதிபதிகள், இது நாள் வரையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் மத்திய அரசின் கொள்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது என்று கூறி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அறிவித்தது நீதிமன்றம்.

மேலும் படிக்க : ரபேல் போர் விமானம் தொடர்பான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

Rafale Deal CAG Report

29 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில், ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான விலைப்பட்டியல் அடங்கிய மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கையினை பொதுக் கணக்குக் குழுவிடம் வழங்கியதாக கூறியிருந்தது.

ஆனால் பொதுக் கணக்குக் குழுவின் Public Accounts Committee (PAC) தலைவராக இயங்கி வரும் மல்லிகார்ஜுன் கார்கெ, இது வரை அப்படி ஒரு அறிக்கை எங்களிடம் வரவில்லை என்று மறுப்பு கீறியிருக்கிறார். இது குறித்து நிதித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எந்த ஒரு கருத்தினையும் என்னால் கூற இயலாது. வழக்கறிஞர்கள் எங்கே பிரச்சனை என்று பார்த்து அதனை சரி செய்வார்கள் என்று கூறினார்.

அந்த தீர்ப்பின் 21வது பக்கத்தில் 25 வது பத்தியில் “எங்களிடம் மத்திய அரசு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், போர் விமானத்தினை எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோ என்று குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு போர் விமானத்தின் அடிப்படை விலை எவ்வளவு இருக்கும் என்பதை மற்றும் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் நாட்டின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்பதால் விலை தொடர்பான விளக்கங்கள் அதில் இடம் பெறவில்லை. ஆனால் மத்திய தணிக்கைத் துறையின் பொதுக்கணக்கு குழுவிடம் விலைப்பட்டியல் பற்றிய முழுமையான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு அடுத்த பக்கத்தில் போர் விமானங்களின் விலை தொடர்பாக மிகவும் துல்லியமான ஆய்வு நடத்தப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார்.

Rafale Deal CAG Report குறித்து மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

மத்திய தணிக்கைக் குழுவிற்கே அறிக்கை வராத போது எப்படி பொதுக் கணக்கு குழுவிடம் அறிக்கை கிடைத்திருக்கும். என்னுடைய கையெழுத்தினை யார் போட்டு இந்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அப்படி ஒரு அறிக்கை வந்திருதால் அது நிச்சயம் நாடாளுமன்றத்தில் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த அறிக்கை எங்கிருந்து வந்தது, யார் இதனை சமர்பித்தார்கள் என எதுவும் தெரியவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் என குற்றம் சுமத்தியுள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.

ராகுல் காந்தி விமர்சனம்

எப்படி நம்முடைய நீதித்துறை செயல்படுகிறது என்று பாருங்கள். ஒரு தீர்ப்பில் மத்திய தணிக்கைக் குழுவினர் யாருமே காணாத ஒரு அறிக்கை, பொதுக்கணக்குத் துறையின் தலைமை இயக்குநருக்கு வந்து சேராத ஒரு அறிக்கையினை உச்ச நீதிமன்றம் மட்டுமே பார்த்திருக்கிறது. என்னால் இதை புரிந்து கொள்ள இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

யாராவது அந்த அறிக்கையை பார்த்தால் கொஞ்சம் கண்ணில் காட்டுங்கள் என்றும் மத்திய தணிக்கைத் துறையின் தலைவருக்கும் அதை காட்டுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இல்லை, இந்தியாவின் மத்திய கணக்குத் துறை வேறெங்காவது இயங்குகிறாதா, இல்லை அது ஃபிரான்சில் தான் இயங்குகிறது என்றாலும் கூறுங்கள் என்று அவர் மத்திய அரசை நகைப்புடன் சாடியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தன்னுடைய தரப்பிலும் ஒரு ரபேல் தீர்ப்பு தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு பின்னால் மோடி இருக்கின்றாரா என்றும், இல்லாத மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையை எப்படி நீதிமன்றம் தீர்ப்பில் இணைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மனுதாரார்

ரபேல் ஒப்பந்தம்  தொடர்பாக நீதிமன்ற விசாரணை வேண்டும் என கேட்டுக் கொண்ட 4 மனுதாரர்களில் ஒருவரான, ஆம் ஆத்மி கட்சியைத் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இல்லாத  அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியடைய வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close