Advertisment

‘தடுக்க முடியாது’: தந்தை ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு லடாக்கில் ராகுல் காந்தி பைக் பயணம்

லடாக்கில் பைக் சவாரி செய்யும் ராகுல் காந்தி; தந்தை ராஜீவ் காந்தி பிறந்தநாளை லடாக்கில் கொண்டாட திட்டம்

author-image
WebDesk
New Update
Rahul Gandhi at Ladakh

லடாக்கின் பாங்காங் ஏரிக்கு பைக் சவாரி செய்த புகைப்படங்களை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களைச் சென்றடையும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சனிக்கிழமையன்று லடாக்கின் அழகிய நிலப்பரப்பு வழியாக பாங்காங் ஏரிக்கு பைக்கில் செல்வதைக் காண முடிந்தது.

Advertisment

ராகுல் காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஆகஸ்ட் 20 ஆம் தேதி கொண்டாடுகிறார். “பாங்காங் ஏரிக்கு நாங்கள் செல்லும் வழியில், என் தந்தை கூறுவது என்னவென்றால், இது உலகில் உள்ள மிகவும் அழகான இடங்களில் ஒன்றாகும்,” என்று பதிவிட்டு ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பைக் சவாரியின் படங்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: அமேதியில் ராகுல், வாரணாசியில் பிரியங்கா: மாநில காங்கிரஸ் தலைவர் தகவல்

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள படங்களில், ராகுல் காந்தி கே.டி.எம் 390 அட்வென்ச்சர் பைக்கை ஓட்டிச் செல்கிறார், மற்ற ரைடர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். காங்கிரஸ் எம்.பி,யான ராகுல் காந்தி ஹெல்மெட், கையுறைகள், சவாரி பூட்ஸ் மற்றும் ஜாக்கெட் என பைக் சவாரிக்கு தேவையான அனைத்து பைக்கிங் கியரில் காணப்படுகிறார். ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) - கார்கில் தேர்தல் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

மேலும் படங்களைப் பகிர்ந்துகொண்டு, "மேலேயும் தொடர்ந்தும் - தடுக்க முடியாது!" என்று காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5, 2019 அன்று சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், லடாக்கிற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். ஜனவரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தார்.

பெரும்பாலான இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு சலுகை பெற்ற வம்சமாக, ராகுல் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் தனது இமேஜை மீண்டும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார், என குறிப்பாக பா.ஜ.க உள்ளிட்ட காங்கிரஸின் எதிர்கட்சிகள் கேலி செய்துள்ளன. அமைதியற்ற, ஆக்ரோஷமான இளைஞன் தனது சொந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை கிழித்தெறிந்தது கடந்த காலத்தின் ஒரு விஷயம். இம்முறை ராகுல் காந்தியை ஒவ்வொருவரின் பிரதிநிதியாக முன்னிறுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, காங்கிரஸுடன் கூட்டு சேர விரும்பும் எதிர்க் கட்சிகளை எளிதாக்குவதற்கு, ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடிக்கு மாறாகக் காட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rahul Gandhi Congress Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment