நீட் டேட்டா லீக் விவகாரம்: சிபிஎஸ்இ-யிடம் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

சிபிஎஸ்இ அமைப்பின் நம்பகத்தன்மையை விரைவில் நிரூபிக்க வேண்டுமென அதன் தலைமை அதிகாரிக்கு கடிதம்.

By: Updated: July 24, 2018, 02:46:53 PM

நீட் டேட்டா லீக்கான விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிபிஎஸ்இக்கு கடிதம் மூலம் கேள்வி அனுப்பியுள்ளார்.

நீட் தேர்வினை, இந்த வருடம் சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதில் சுமார் 2 லட்சம் மாணவர்களின் பெயர், அலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் என அனைத்தும் ஆன்லைனில் லீக்காகி உள்ளது.

இந்த டேட்டா லீக் பற்றி படிக்க 

நடுவண் இடைநிலைக்கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ நடத்தும் தேசிய மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இது. இதில் பங்குகொண்ட மாணவர்களின் தனி விபரங்கள் எப்படி திருடு போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி.

சென்ற வாரம் நீட் தேர்வர்களின் முழு விபரங்களையும் தருகின்றோம். அதற்கு சுமார் 2 லட்சம் செல்வாகும் என்று இணையம் ஒன்றில் தகவல் வெளி வந்திருந்தது. அது தொடர்பாக பரபரப்பான விவாதங்கள் ஊடகத்துறையில் மேற்கொள்ளப்பட்டது.

சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் தகவல் பாதுகாப்பு என அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டது என்றும் கூறிய ராகுல், இது தொடர்பாக சிபிஎஸ்இ தலைமை அதிகாரி அனிதா கர்வால் அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்த லீக்கேஜ்ஜிற்கு உதவியாக இருந்த அத்தனை நபர்கள் மீதும்  தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த விவகாரம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு, இந்த தகவல்களை வெளியிட்ட neetdata.com இணையதளம் தற்போது செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் நாடெங்கிலும் இருந்து சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதற்காக 136 நகரங்களில் சுமார் 2225 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Rahul gandhi writes to cbse over neet data leak demands inquiry

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X