Advertisment

நரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா?

காவி கட்சியினர் கோபப்படும் அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. இது வெறும் அன்பின் வெளிப்பாடு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No-Confidence motion: Rahul Gandhi Hugs PM Modi

No-Confidence motion: Rahul Gandhi Hugs PM Modi

நேற்று நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களையும் மட்டுமல்லாமல், மொத்த தேசத்தையும் தான்.

Advertisment

ட்விட்டரில் ராகுல் ட்ரெண்டிங் ஆனதில் வியப்பு ஏதும் இல்லை. இது நாள் வரை நடைபெற்ற சட்டசபை, மக்களவை வாதங்களில் கசப்பான அனுபவங்களும் தள்ளு-முள்ளுக்களும் தான் அரங்கேறும். இவர்களையா நாம் ஓட்டு போட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்று யோசிக்க வைக்கும்.

ஆனால் நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இளைஞர்கள் மனதில் ஹிட் அடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

நேற்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கான காரணங்களை ஒன்றன் பின் ஒன்றாக தெளிவாக பேசினார் ராகுல். பேசி முடித்தவுடன் தன்னிருக்கையில் இருந்து சென்று, பிரதமர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று அவரை எழச் சொன்னார். ஆனால் நரேந்திர மோடி தன்னிடத்தில் இருந்து எழாமல் இருக்கவே, ராகுல் சற்று குனிந்து, நரேந்திர மோடியை கட்டிப்பிடித்து நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தார்.

Rahul hugs PM நாடாளுமன்றத்தில் பிரதமரை கட்டிப்பிடித்த ராகுல்

பின்பு திரும்பிய ராகுல் காந்தியை, சற்றும் எதிர்பாராமல் நரேந்திரமோடி அழைத்து, அவரிடத்தில் இரண்டு வார்த்தைகள் பேசி, அவர் தோளை தட்டிக் கொடுத்தார். ராகுல் காந்தி நரேந்திர மோடியை கட்டிக் கொண்ட வீடியோவினைக் காண!

அங்கிருந்து திரும்பி வந்த ராகுல், தன்னுடைய கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கண்ணடித்தார்.

இதை மிகவும் ஆரோக்கியமான நிகழ்வாக பார்க்கிறது காங்கிரஸ். ஆனாலும், ராகுலின் அம்மா சோனியா காந்தி, ராகுலிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவினரின் கருத்து

மக்களவை தலைவர் சுமித்ரா மகஜன்  “நாடாளுமன்ற ஒழுங்குமுறையினை நாம் ஏற்று நடந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு நாட்டின் பிரதமர் என்றும் யோசிக்காமல் கட்டிப்பிடிப்பதா?  என்ன நாடகம் அரங்கேறியது? என்று தான் யோசித்தேன் என்றார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “இது உத்ரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சிப்கோ இயக்கத்தினை நினைவு கூறுகிறது” என்று குறிப்பிட்டார்.

கிர்ரன் கேர் ராகுல் காந்தியினை பாலிவுட் நடிக்கச் சொல்லி கூறினார்.

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ “இது என்ன நாடகமா? யார் வேண்டுமானாலும் வந்து பிரதமரை கட்டிக் கொள்ள முடியுமா? அவருடைய பதவிக்கு மரியாதை தர கற்றுக் கொள்ளுங்கள் ராகுல் என்றார்.

ராகுலை கொண்டாடும் காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதனை ஆரோக்கியமான நிகழ்வாகவே பார்க்கின்றார்கள். இது கதையிலேயே இல்லாத திருப்பம். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார் ஜோதிராதித்ய சிந்தியா.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா “இந்த காவிக் கட்சியினர் எதற்கு இத்தனை கோபத்தினை கொட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர், இதுவரை பாஜகவினர் செய்த அனைத்து விதமான வெறுப்பு நடவடிக்கைகளையும் அன்பால் மாற்றி அமைக்க விரும்புகிறது. To read this article in English 

50 மாத ஆட்சி காலத்தில் மோடி நாட்டினை மதம், மொழி, இனம், நிறம், ஆடை, உணவு என அனைத்து வகையிலும் இந்தியாவை கூறுபோட்டிருக்கிறார். நீங்கள் நாட்டினை பிரித்தால் நாங்கள் அதை ஒன்றிணைக்கவே செய்வோம். ஏன் என்றால் நாங்கள் தான் காங்கிரஸ் என்று சுர்ஜிவாலா.

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment