ஹோட்டலில் உணவருந்த வந்தவர்களுடன் செல்ஃபி எடுத்த ராகுல்... கோவாவில் அம்மாவுடன் சுற்றுலா...

பாதுகாப்பு காவலர்கள் இல்லை... அரசியல் பரபரப்பு இல்லை... அம்மாவுடன் கோவாவில் சுற்றுலா..

Rahul-Sonia Goa Private Visit : பொதுக்கூட்டங்கள், தேர்தல்கள், பிரச்சாரங்கள், மீண்டும் பொதுத் தேர்தல், பிரச்சாரங்கள், சந்திப்புகள், இடையே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் என்று காங்கிரஸ் பயங்கர பிஸியாக இருக்கிறது. அதிலும் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மிகவும் பிஸியாக இருந்தார்.

Rahul-Sonia Goa Private Visit – செல்ஃபி எடுத்துக் கொண்ட ராகுல்

இந்த பரபரப்புகளுக்கு விடுமுறை அளிக்கும் விதத்தில் மூன்று நாட்கள் அம்மாவுடன் கோவாவில் தங்கியுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் தெற்கு கோவாவில் இருக்கும் ஃபிஷ்ஷர்மென்ஸ் வார்ஃப் என்ற உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டனர்.

அதன் பின்னர், அந்த உணவகத்தில் தங்கள் உறவினர்களுடன் வந்திருந்த  பல் மருத்துவர் ரச்னா ஃபெர்னாண்டஸ் “உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா? “ என்று கேட்ட போது, உணவுக்கான கட்டணத்தை கட்டிவிட்டு நிச்சயம் எடுத்துக் கொள்கின்றேன் என்று ராகுல் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Awed by his charm and modesty ???? #rahulgandhi

A post shared by Rachna Fernandes (@rachna_the_dentist_fernandes) on

கூறியதைப் போலவே பில் கட்டி முடித்தவுடன் ரச்னாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் ராகுல். இது குறித்து ரச்சாவிடம் கேட்ட போது, பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை. அவர்கள் இருவரும் வந்து சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து கிளம்பி விட்டனர் என்று கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் கோவாவில் உள்ளனர் சோனியாவும், ராகுலும். கட்சி சார்பான எந்த கூட்டத்திலும் பங்கேற்பதற்காக இவர்கள் கோவா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தவறி  விழுந்த புகைப்படக்காரரை கை கொடுத்து தூக்கிவிட்ட ராகுல் காந்தி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close