தொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்... இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா ?

Telangana and Rajasthan Assembly Election 2018 : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலுங்கானா மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர்...

தெலுங்கானா சட்டசபை தேர்தல் 2018 :  தெலுங்கானாவிலும் ராஜாஸ்தானிலும் தொடங்கியது சட்டசபை தேர்தல்கள். தெலுங்கானாவில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் சரியாக 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கின.

நவம்பர் 28ம் தேதி தான் மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த வருடம் ஐந்து மாநிலங்களிற்கான சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்தன. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : பெண்களே நிர்வகிக்கும் 500 வாக்குப் பதிவு மையங்கள்… சூடுபிடிக்கும் ம.பி. தேர்தல் களம்…

தெலுங்கானா சட்டசபை தேர்தல்

தெலுங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட சுமார் 1821 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றார்கள். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். நக்சல்கள் நடமாடும் பகுதிகளில் 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 119 இடங்களிலும் போட்டியிருகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் போட்டியிருகிறது. பாஜக 118 இடங்களில் களம் இறங்குகிறது.

ராஜஸ்தான் தேர்தல்

ராஜஸ்தானில் சுமார் 4.77 கோடி வாக்களர்கள் உள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 189 பெண்கள் உட்பட 2247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் முடிவுகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஜேசிசி கூட்டணி (மாயாவதி – அஜித் ஜோகி), காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முணை போட்டி நிலவி வந்தது. இரண்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 88 தொகுதிகளில் முதற்கட்டமான நவம்பர் 12ம் தேதி 18 தொகுதிகளிலும், நவம்பர் 20ம் தேதி மீதம் இருந்த 10 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில்  28ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.  ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல்களையும் சேர்த்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் 11ம் தேதி அறிவிக்கப்படும்.

கருத்துக் கணிப்பு முடிவுகள்

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : 5 மாநில தேர்தல் முடிவுகள்  கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close