ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தொடரை, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கூட்ட வேண்டும் என்று ஒருசேர முழுக்கமிட்டனர்
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து முயற்சிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
Advertisment
அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகளை ஆளும் கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், இதனை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காத்திருந்தனர். அப்போது, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் "Rajyapal mahodya House bulao" என்று முழக்கமிட்டனர். அதாவது, ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தொடரை, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கூட்ட வேண்டும் என்று ஒருசேர முழுக்கமிட்டனர்.
முன்னதாக ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் எம்.எல்.ஏக்களிடம் உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil