சினிமா நிகழ்ச்சி மேலாளரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகருமான ராமச்சந்திர ராவ், கோவிட் -19 ல் இருந்து மீண்டு வீடு திரும்பிய அவரது மனைவி கலாவதிக்கு ஒரு பெரிய சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
தன் வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியராக பணிபுரிந்த கலாவதிக்கு சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், ஸ்ரீராமா நகரில் தங்கியிருக்கும் தனது கணவர் மற்றும் பத்து வயது மகள் ஆகியோரை பிரிந்து செல்ல வேண்டியிருந்தது. அதுவரை நன்றாக பழகிய அக்கம் பக்கத்தினர், கொரோனா ஏற்பட்ட பிறகு திடீரென்று எந்த ஆதரவும் கொடுக்காமல் விரோதமாகமாறியதாக தெரிகிறது.
புலிகளின் மிகப்பெரிய புகலிடமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை…
தங்கள் மீதான புறக்கணிப்பு, களங்கம் மற்றும் சமூக தடைகளை எதிர்கொண்ட ராவ், தனது மனைவியின் வருகையை ஒரு பெரிய கொண்டாட்டமாக மாற்ற முடிவு செய்தார். ஒரு சிவப்பு கம்பளத்தை வீட்டிற்கு வெளியே விரித்த ராவ், பெண்கள் சிலரை மலர்களை தூவ ஏற்பாடு செய்தார், மேலும் இந்த சம்பவத்தை பாதுகாக்க அந்த வரவேற்பு நிகழ்வை பதிவு செய்தார்.
மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி ஏ வீரபத்ரையா மற்றும் அனைத்து ஊழியர்களையும் பழங்கள், மாலைகள் மற்றும் பூங்கொத்துகளால் ராவ் கௌரவித்தார். "ஆம், நான் நூறு சதவிகிதம் ரஜினிகாந்த் ரசிகன் தான். எங்கள் வீடு பத்து நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது, என் மனைவியைத் திரும்பிப் பார்க்க ஆவலாக இருந்தேன்" என்று ராவ் குறிப்பிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a4-3-300x147.jpg)
அவரது மனைவி வீட்டிற்கு வரும் போது, இசை மேளங்கள் முழக்க, மலர்கள் தூவப்பட, தான் விரும்பியபடியே ஒரு பெரிய கொண்டாட்ட நிகழ்வாக மாற்றி, அந்த ஏரியாவையே அமளிதுமளி ஆக்கிவிட்டார் ராவ்.
ராஜஸ்தான் அரசியல் நிலவரம்; திருத்தப்பட்ட முன்மொழிவு ஆளுநருக்கு அனுப்பி வைப்பு
ஸ்ரீராமா நாகராவில் வசிப்பவர்கள் அனைவரும் ராவின் ஸ்டைலை சிலாகிக்கின்றனர். ரஜினியின் ரசிகரான ராவ், ஒருபோதும் சூட் அணியாமல் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. "அவர் சூட் அணியவில்லை என்றால் நாங்கள் அவரை அடையாளம் காண முடியாது" என்று அக்கம்பக்கத்தினர் கூறினர். தினசரி பயன்பாட்டிற்காக அவர் தனது அலமாரியில் முப்பதுக்கும் மேற்பட்ட சூட்களை வைத்திருக்கலாம், என்று கூறுகின்றனர்.
"மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவிட் -19 வார்டில் சிகிச்சைப் பெற்றவர்கள் வேகமாக குணமடைவதைக் கண்டதால் நான் குணமடைவேன் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது" என்று மருத்துவமனையில் மீண்டும் பணியில் சேரவிருக்கும் கலாவதி குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil