கேரளா வெள்ளம் : கேரளா மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயனுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
கேரள மாநிலத்தில் கரை புரண்டோடும் வெள்ளம்:
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்து வருவதால் அம்மாநிலத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பெரிதளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. கேரளா வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து இதுவரை 53,501 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் முதல்வர் தனது மாநிலத்திற்கு ஒதுக்கிய நிதியுதவி குறித்த செய்திக்கு
வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை ஈடுபட்டுள்ளன என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்:
இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ள இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உட்பட பல பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். இவரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இடங்களை இன்று உள்துரை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இவருடன் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் உடன் இருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள அரசுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளும் நிவாரண உதவி தொகையை வழங்கி உள்ளன.
கேரளா வெள்ளம் : தமிழகம் சார்பில் அளிக்கப்படும் நிதியுதவி
தமிழகத்தின் சார்பாக 5 கோடி நிவாரண தொகை வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து திமுக சார்பில் கேரள மாநிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கில் தெரிவித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர். நேற்று நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து ரூபாய் 25 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார்கள்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி நிதியுதவி!
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் 5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடிகர் சங்கம் புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. அப்போது மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கேரள மாநிலத்தின் நிதியுதவு குறித்து அறிவிப்பு அளிக்கப்பட்டது.