அயோத்தி ராமர் கோவில் விவகாரம் : அயோத்தியில் மீண்டும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலது சாரி அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாஜக தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் அதற்கு மிக விரைவில் சட்ட வரையறை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : ராமர் கோவில் தொடர்பாக யோகி ஆதித்யநாத்தின் கருத்து
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் - தற்கொலை மிரட்டல்
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்கவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அயோத்தியை சேர்ந்த சாது ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அயோத்தியில் இருக்கும் தபஸ்வீ சாவ்னி கோவிலின் மடாதிபதி பரமஹன்ஸ் தாஸ் ஆவர். மத்திய அரசு உடனடியாக ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தார்.
அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய உண்ணாவிரத்தத்தை யோகி ஆதித்யநாத்தின் பேச்சை கேட்டு பின்னர் அக்டோபர் 9ம் தேதி கைவிட்டார். டிசம்பர் 5ம் தேதிக்குள் ராமர் கோவில் கட்டப்படும் தேதியை குறிப்பிடவில்லை என்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 அன்று தற்கொலை செய்துகொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.