Ram temple : சர்ச்சைக்குரிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ஞானவாபி வளாகத்தில் முழுமையான தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் கூறியது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மார்க்தர்ஷக் மண்டல நிகழ்வில் பேசவில்லை. ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்வினை முடித்துவிட்டு இதுகுறித்து வி.எச்.பி.யின் செயல்தலைவர் அலோக் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார்.
ஏன் காசி விவகாரத்தை மார்க்தர்ஷக் மண்டலில் பேசவில்லை?
ராமஜென்ம பூமி விவகாரம் தான் பெரிய விவகாரம். எனவே அதனை முதலில் முடிப்போம். ராம்லல்லா கர்பகிரகத்தில் வைக்கப்படும். கோவில் கட்டுமானம் 2024ல் நிறைவுறும். அதுவரை நாங்கள் வேறு எந்த விவகாரம் குறித்தும் பேசக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.
மேலும் படிக்க : காசி விஸ்வநாதர் கோவில் Vs ஞானவாபி மசூதி; முழுமையான தொல்லியல் ஆராய்ச்சி அறிக்கை சமர்பிக்க உத்தரவு
வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
இது நீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்கால தடை. நாங்கள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்துவிட்டு தேவையான இடத்தில் பேசுவோம்.
நீதிமன்ற உத்தரவை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
வரலாற்று உண்மைகள் என்ன என்பதை ஆராய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை 2024ம் ஆண்டுக்கு முன்பு கையில் எடுக்க வி.எச்.பி. முடிவு செய்யவில்லை. தற்போது ராமர் கோவில் பற்றி மட்டுமே சிந்திக்கின்றோம். இது முடிந்த பிறகு நாங்கள் காசி விவகாரம் குறித்து பேசுவோம்.
ராமஜென்மபூமி பாஜக அதிகாரத்திற்கு வர உதவியது. காசி விவகாரத்திலும் இது போன்று அரசியல் தாக்கம் ஏதாவது இருக்குமா?
2024 வரை நாங்கள் காசி விவகாரம் குறித்து ஏதும் நினைக்கவில்லை. இதில் எங்கிருந்து அரசியல் தாக்கம் வந்தது? இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
அயோத்தியா தோ பஸ் ஜன்கி ஹேய்,காஷி, மதுரா பாக்கி ஹேய் (அயோத்தி ஆரம்பம் தான்… காசியும், மதுராவும் பின்னால் வரும்) என்று சில வருடங்களுக்கு முன்பு வி.எச்.பி.யின் கோஷமாக இருந்தது. இன்றைய நிலைப்பாடு என்ன?
தற்போது முக்கியமானது குறித்து அக்கறை செலுத்தி வருகின்றோம். ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024ன் போது கட்டிமுடிக்கப்படும். அதுவரை காசி குறித்தோ, மதுரா குறித்தோ நாங்கள் யோசிக்க மாட்டோம் என்று பதில் கூறினார் அலோக் குமார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil