மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையத்தின் முதல் இயக்குநராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று(ஜூன்.1) பதிவிட்ட டிவீட்டில், பேராசிரியர் ஆர். சந்திரசேகரன், சென்னை சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிளாசிக்கல் தமிழின் (சி.ஐ.சி.டி) முதல் இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, தனது பதிவை, @narendramodi @AmitShah @CMOTamilNadu ஆகியோருக்கு ட்வீட் செய்திருக்கிறார். அத்துடன் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கமான @rajinikanth -க்கும் ரமேஷ் பொக்ரியால் டேக் செய்திருக்கிறார்.
ரெம்டெசிவைர் மருந்து: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்
இந்த செயல் தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. மத்திய - மாநில அரசுகள் தொடர்பான ஒரு பதிவில் நடிகரான ரஜினிகாந்த் எதற்காக டேக் செய்யப்பட வேண்டும் என்பது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
1, 2020
1, 2020
1, 2020
1, 2020
சிலர் தங்கள் டீவீட்டில், "அரசு பொறுப்புகளில் ஏதேனும் இருக்கிறாரா ரஜினிகாந்த்? எதற்காக அரசு தொடர்பான ட்வீட்டுகளில் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டார்? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்கு ரசிகர்கள் பலரும் ரஜினிக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு ! கேரள அரசுக்கு குவியும் பாராட்டுகள்
சிலர், தமிழகத்தில் அடையாளம் ரஜினி என்பதால், அவரை முன்னிலைப்படுத்தி அமைச்சர் ட்வீட் செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தர்காண்ட்டைச் சேர்ந்தவர். ரஜினியும் அடிக்கடி இமயமலை செல்பவர் என்பதால், அங்கு இருவருக்கும் ஏற்பட்ட நட்பின் அடிப்படையிலேயே, அவர் ரஜினியை டேக் செய்திருக்கலாமே ஒழிய, வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“