நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) திட்டம் குறித்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடு தழுவிய என்.ஆர்.சி செயல்முறைக்கு “முறையான சட்ட செயல்முறை” பின்பற்றப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், தேசிய குடுமக்கள் பதிவேடு குறித்து மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) சேகரிக்கப்பட்ட “சில” தரவுகள் என்ஆர்சிக்கு 'பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்படாமலும் போகலாம்' என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் பீகார் உட்பட அரை டஜன் மாநில அரசுகள் நாடு தழுவிய என்.ஆர்.சிக்கு மறுத்து வரும் நிலையில் ரவிசங்கர் பிரசாத்தின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
'தி சண்டே எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு கொடுத்த ஒரு விரிவான நேர்காணலில் இந்த கருத்தை அமைச்சர் கூறினார்.
கடந்த வாரம் ஏ.என்.ஐ என்ற செய்தி நிருவனாத்துக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா : என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவை வெவ்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன என்றும் , என்பிஆர் செயல்முறையில் பெறப்படும் டேட்டாக்கள ஒருபோதும் என்ஆர்சி பயிற்சிக்கு பயன்படுத்தப்படாது என்றும் கூறினார். "இரண்டு செயல்முறைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.
என்.ஆர்.சி எப்போது செயல்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டதற்கு, பிரசாத் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம், எல்லாவற்றிலும் ஒரு சட்ட செயல்முறை உள்ளது என்றார்.
முதலாவதாக ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் , இரண்டாவதாக முறையான அறிவிப்பு வெளியிடப்படவேண்டும். பின்னர் அதற்கேற்ற செயல்முறை, சரிபார்ப்பு, ஆட்சேபனை, ஆட்சேபனை கேட்டல், மேல்முறையீட்டு உரிமை.... போன்றவைகள் வரையறுக்கப் படவேண்டும்.
இது குறித்து மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்படும். மாநில அரசின் கருத்தும் கேட்கப்படும். ஏதாவது செய்ய வேண்டுமானால், அது பகிரங்கமாக செய்யப்படும். என்.ஆர்.சி-ல் எதுவும் ரகசியமாக இருக்காது. "
அசாமில் நடத்தப்பட்ட என்.ஆர்.சி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நாடு தழுவிய என்.ஆர்.சிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரசாத் கூறினார். குடியுரிமை (குடிமகனைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) 2003 விதி 3 மற்றும் 4ன் கீழ் இந்த செயல்முறை தொடங்கும் போது, அது குறித்த சரியான பொது அறிவிப்பு இருக்கும் என்றார்.
மும்பை வனப்பகுதிக்கு வரும் சுல்தான் புலி பற்றி தெரியுமா?
குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் மூத்த தலைவர் பி.சிதம்பரம் ஆகியோரை சட்ட அமைச்சர் வன்மையாக சாடினார். 2010ம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில், ப.சிதமபரம் (உள்துறை மந்திரியாக இருந்த பொது),மக்களவையில் குடிமக்கன் பதிவேடு தேசிய மக்கள் பதிவேட்டின் ஒரு அங்கமாக இருக்கும் என்று ப.சிதம்பரம் பேச்சை பிரசாத் சுட்டிக் காட்டினார்.
ஒரு புதிய என்.பிஆர் செயல்முறையை தொடங்குவதற்கான மத்திய அரசின் முடிவை ஆதரித்து பேசிய பிரசாத், மக்கள் தொகை (சென்சஸ்) கணக்கெடுப்புத் தரவை எல்லா அதிகார மையத்திற்கும் பகிரங்கப்படுத்த முடியாது என்பதால் என்.பிஆர் அவசியமென்றும், நலத்திட்டங்களை வழங்குவதற்கான கொள்கைகளை வடிவமைக்க என்பிஆர் டேட்டா பயன்படுத்தப்படும் . என்.ஆர்.சி என்பது முற்றிலும் வேறுபட்ட கருத்து… குடியுரிமை (குடிமகனின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள், 2003, என்.பி.ஆர் பேசப்படுகிறது … என்றார்.
பெற்றோர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்கள் பிறந்த இடம் போன்ற என்.பி.ஆர் டேட்டாக்கள் என்.ஆர்.சிக்கு பயன்படுத்தப்படுமா என்று குறிப்பாக கேட்டதற்கு பிரசாத், “ அகில இந்தியா என்ஆர்சி- க்கு முழு சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படும். சில (என்.பிஆர் டேட்டா) பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்படாமல் இருக்கலாம்…
ஆனால், உங்கள் கேள்வியை சற்று பெரிதாக்கி பாருங்களேன்.....
உதாரணமாக, எந்தவொரு குடிமகனும் வாக்களிக்க முடியும், ஆனால் வாக்களிக்க நீங்கள் வாக்காளர்களின் பட்டியலில் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் ஒரு குடிமகனாக இருந்தாலும், வாக்காளர்களின் பட்டியலில் இல்லாவிட்டால், ஒரு குடிமகன் வாக்களிக்க முடியாது. இந்த வாக்காளர்களின் பட்டியல் இயல்பாக மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
இதேபோல், பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு போன்றவைகளுக்கு முழு அளவிலான டேட்டா எடுக்கப்படுகிறது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், பெற்றோரின் விவரங்கள் உள்ளது. ஏன்........ வாக்காளர்களின் பட்டியலில் கூட பெற்றோர் விவரங்கள் உள்ளது .
எனவே இந்த விஷயம் (மட்டும் தானா ) என்.பி.ஆர் பெற்றோரின் தரவை சேகரிக்கிறது?…..
நான் ஏதும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேனே, என்று சூசமாக கேட்டார்.
என்.ஆர்.சி- செயல்முறையில் இருந்து விலக்கப்பட்டால் இந்துக்கள் குடியுரிமை திருத்தம் சட்டத்தை கேடயமாகப் பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரசாத், இந்திய முஸ்லிம்கள் அஞ்சுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று பிரசாத் வலியுறுத்தினார்.
மேலும், குடியுரிமை திருத்தம் சட்டம் காரணமாக எந்தவொரு இந்தியருக்கும் குடியுரிமை கொடுக்கவோ/ மறுக்கவோ முடியாது என்றும் கூறினார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், என்.ஆர்.சி முற்றிலும் மாறுபட்ட ஏற்பாடு. இது இந்திய குடிமக்களுடன் மட்டுமே தொடர்புடையது. இந்திய முஸ்லிம்களுக்கு அஞ்சுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
மூன்று நாடுகளைச் சேர்ந்த (பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்) இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்திஸ்டுகள் , சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகளுக்கு மட்டுமே குடியுரிமை திருத்தம் சட்டம் உள்ளது. இந்த சட்டம் எந்த இந்தியருக்கும் பொருந்தாது என்று கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலிஸ் நடவடிக்கை குறித்து பேசிய பிரசாத்,நரேந்திர மோடி அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை மதிக்கிறது என்றார். "நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், மதிக்கிறோம். அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் யாராவது தீவைத்து பொது சொத்துக்களை அழித்தால், அது பொறுத்துக் கொள்ளப்படாது, தகுந்த சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்று கூறி தனது உரையாடலை நிறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.