How to Book Train Tickets on Reliance JioRail App : ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில் ஜியோ என்று அழைக்கப்படும் இந்த செயலியின் மூலமாக ரயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது, கேன்சல் செய்வது மிகவும் எளிமையாகிவிடும்.
தக்கல் புக்கிங்க் கூட செய்து கொள்ளும் வசதியுடன் வெளியாகியுள்ள இந்த ஆப்பினை ஜியோ ஆப்ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Reliance JioRail App : ஜியோ ரயில் ஆப் மூலமாக உங்களால் எதையெல்லாம் தெரிந்து கொள்ள இயலும் ?
பயனாளிகளுக்கு ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி அக்கௌண்ட் இல்லை என்றாலும், இந்த ஆப் மூலமாக உங்களால் புதிய ஐ.ஆர்.சி.டி.சி அக்கௌண்ட்டை உருவாக்கிக் கொள்ள இயலும்.
இந்த ஆப் மூலமாக டிக்கெட் புக் செய்தவுடன், பி.என்.ஆர் ஸ்டேட்டஸ், அலர்ட்ஸ், நீங்கள் பயணிக்கும் ரயிலை லொக்கேட் செய்வது, ரயிலில் வழங்கப்படும் உணவுகள் குறித்து அறிந்து கொள்வதிற்கும் இந்த செயலி உங்களுக்கு பெரிதும் உதவும்.
சீட் அவைலபிலிட்டி, ரூட்கள், பயணிகள் ரயில் பற்றிய முழு விபரங்கள் ஆகியவற்றை இதில் அறிந்து கொள்ளலாம்.
டிக்கெட் பதிவு செய்ய டெபிட், கிரெடிட் கார்ட்கள் மற்றும் ஈ-வாலட்கள் (e-wallets) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
கடைசி நிமிடத்தில் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்கள் தக்கல் மூலமாக வேகமாக டிக்கெட் பதிவு செய்ய இந்த ஆப் மிகவும் உதவிகரமாக அமையும்.
ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 போன்களிலும் இந்த ஆப் தற்போது செயல்படுகிறது.
மேலும் படிக்க : இனி ரயில் பயணமும் ஜாலி தான்.. ஜியோ ஆப்பில் டிக்கெட் புக்கிங் வசதியும் வந்தாச்சி!