Republic Day 2020: நாட்டின் 71வது குடியரசு தின கொண்டாட்டம், இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் மெஸியாஸ் பொல்சனாரோ பங்கேற்றுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் பெறும் உரிமையை பெற்றுள்ளனர். கல்வி வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளது.
71வது குடியரசு தினம் = ஜனாதிபதி ஆற்றிய உரை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சாதனைகள் குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. மிஷன் ககன்யானில் இஸ்ரோ முன்னேறி வருகிறது, இந்தியா அதை உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறது. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் தடகள வீரர்கள் சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். நீர் சேமிப்புக்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Live Blog
Republic Day 2020 Live Updates: நாட்டின் 71வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வுகளை இன்று உடனுக்குடன் காணலாம்.
நாட்டின் 71வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையிலான வாகனங்கள் அணிவகுத்தன. சினுக் மற்றும் அபாஷி போர்விமானங்கள் முதன்முறையாக இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 71வது குடியரசு தினத்தையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
My best wishes to each & every Indian on this our Republic Day.
— Rahul Gandhi (@RahulGandhi) https://twitter.com/RahulGandhi/status/1221263282540929025">January 26, 2020
सभी देशवासियों को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं।https://twitter.com/hashtag/RepublicDay2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#RepublicDay2020 https://t.co/P4ogRzuPN3">pic.twitter.com/P4ogRzuPN3
இதுவரை நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களில், அணிவகுப்பு , டில்லி இந்தியா கேட் பகுதியிலேயே நடைபெற்று வந்தது. இம்முறை பழைய சம்பிரதாயங்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன. அணிவகுப்பு, போர் நினைவு சின்னம் பகுதியிலிருந்து துவங்குகிறது. பிரதமர் மோடி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்க உள்ளார்.
குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் மெஸியாஸ் பல்சனோரோ கலந்துகொண்டுள்ளார். பிரேசில் தலைவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 71வது குடியரசு தின கொண்டாட்டங்கள், டில்லி போர் நினைவு சின்னம் அருகே இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் பலர் பங்கேற்று இருப்பதால், உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வான்வெளியில், விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சுதந்திர தினம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்கு வழங்கியது தான் சுதந்திரம். நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights