India's Republic Day 2019 Parade: 70-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் அணி வகுப்பு மரியாதையில் இந்திய தேசிய இராணுவ (ஐ.என்.ஏ.) வீரர்கள் முதல் தடவையாக பங்கேற்கிறார்கள். முதன்முதலாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு வரலாற்றில் இடம் பெறும்.
ராஜ்பாத்தில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த அணி வகுப்பு 90 நிமிடம் நடைபெறும். இந்த அணி வகுப்பில் முதல் முறையாக 98 முதல் 100 வயதுடைய 4 ஐ.என்.ஏ. வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
ஜட்டிரபா ஆலையில் இருந்து பெறப்பட்ட உயிரி எரிபொருள், பயன்படுத்தப்படும் AN32 என்ற வானூர்தி முதல் தடவையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெறுகிறது. ஷாங்க்நாத், இந்திய ஆயுதப்படையினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலானது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் பங்கேற்பு மிக அதிகமாக இருக்கும்.
அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட M-77 A2 அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர் (ULH) போன்ற சமீபத்திய நவீன ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம் பெறும். இதன் மூலம் இந்தியா தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்தும்.
70th Republic Day Parade: டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்
11:50 AM - விமானப்படையின் சாகசம்... அசந்து போன தென்னாப்பிரிக்க அதிபர்
PM Narendra Modi and South African President Cyril Ramaphosa witness flypast at Republic Day parade in Delhi pic.twitter.com/XSd1B6Lrgw
— ANI (@ANI) 26 January 2019
11:20 AM - முப்படை வீரர்களின் சாகசங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அவர்களது சாகசம் உள்ளது.
#republicdayindia : Motorcyclists showcase Yoga display, at Rajpath during Republic Day parade pic.twitter.com/fRWaxXAYtS
— ANI (@ANI) 26 January 2019
10:50 AM - மாநில கலாச்சாரங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
#RepublicDay2019 : Tableaux of Andaman & Nicobar Islands, Maharashtra and Sikkim pic.twitter.com/fumDqB7xQl
— ANI (@ANI) 26 January 2019
10:40 AM - Republic Day 2019 Images: குடியரசு தினம் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா?
10:20 AM - ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படை, பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. அணிவகுப்பில் அதிநவீன டி-90 பீஷ்மா டாங்க், கே-9 வஜ்ரா-டி பீரங்கிகள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
10:05 AM - காஷ்மீரில் நடந்த தாக்குதலின் போது ஆறு தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த காஷ்மீர் ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. நசீர் அகமது மனைவி அசோக் சக்ரா விருதை பெற்றுக் கொண்டார்.
Delhi: Lance Naik Nazir Ahmed Wani, who lost his life while killing 6 terrorists in an operation in Kashmir, awarded the Ashok Chakra. Award was received by his wife and mother #RepublicDay2019 pic.twitter.com/3bjYdiwTLp
— ANI (@ANI) 26 January 2019
10:00 AM - டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.
Delhi: Prime Minister Narendra Modi greets Dr.Manmohan Singh at Rajpath. #RepublicDay2019 pic.twitter.com/nuT65NVjbi
— ANI (@ANI) 26 January 2019
09:50 AM - சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி, மற்ற தலைவர்களையும், அதிகாரிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
Prime Minister Narendra Modi pays tribute at the Amar Jawan Jyoti. #RepublicDay2019 pic.twitter.com/mykhT7oxxP
— ANI (@ANI) 26 January 2019
09:45 AM - குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். முப்படை தளபதிகளும் அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினர்.
09:30 AM - விழா தொடங்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
(Photos Credit: Tashi tobgyal)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.