அட இதைத்தான் 8 வருஷமா கட்டுனீங்களா? ஒரே மாதத்தில் சரிந்து விழுந்த பீகார் பாலம்!

இதற்காக செலவிடப்பட்ட பணமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல... சுமார் ரூ. 263 கோடி இதற்காக செலவிடப்பட்டது.

By: Updated: July 16, 2020, 04:04:30 PM

bridge in Sattar ghat in Gopalganj, Bihar Collapsed in just 29 days : அரசின் ஒவ்வொரு பணிகளும் முழுமையாக முடிவடைவதற்கு அதிக காலம் எடுப்பது வழக்கமான ஒன்றாகும். சில நேரங்களில் ஒரு உள்கட்டமைப்பு முடிய தேவையான காலத்தையும் மீறி எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு அதிகரிப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைவதும் தற்போது வழக்கமாகிவிட்டது.

மேலும் படிக்க : இன்ஸ்டாவில் பார்ப்பதெல்லாம் நிஜம் இல்லை… ஃபோட்டோவில் விளக்கிய சுந்தர் பிச்சை

கந்தக் ஆற்றின் மேல் சட்டர்காட் அருகே பாலம் ஒன்றை கட்டியது பிகார் அரசு. இந்த பாலத்தை ஜூன் மாதம் 16ம் தேதி திறந்து வைத்தார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். இந்த பாலத்திற்காக ரூ. 263 கோடி செலவிடப்பட்டது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் அது. ஆனால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் சரிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா ப்ளாக்கில் கட்டப்பட்ட இந்த பாலத்தை முதல்வர் அலுவலகத்தில் உள்ள சம்வாத் அரங்கில் இருந்த வண்ணம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த பாலம் சம்பரனை கோபால்கஞ்ச் மற்றும் இதர பகுதிகளை இணைத்து தேவையற்ற வீண் அலைச்சலை தவிர்க்கும் என்று மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த பாலம் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் போகவும் அவர்கள்  ட்விட்டரில் தங்களின் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Rs 263 47 cr bridge in sattar ghat in gopalganj bihar collapsed in just 29 days

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X