New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/cats-26.jpg)
Sabarimala Issue Director Priyanandan
Sabarimala Issue Director Priyanandan
Sabarimala Issue Director Priyanandan : கேரளா என்றாலே கடவுளின் நகரம் என்பது போய் சர்ச்சைகளின் நகரம் என்று பெயர் பெற்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். சபரிமலை என்று கூறினால் கூட பிரச்சனையாகிவிடும் என்ற அளவிற்கு அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. சகோதரத்துவத்திற்கும் மதசார்பின்மைக்கும் பெயர் பெற்ற மாநிலம் இப்போது கருத்து சுதந்திரத்தினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, தன்னுடைய முகநூல் பக்கத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரமாக கவிதை ஒன்றை எழுதி பதிவிட்டிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநர் பிரியானந்தன்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று காலை, வல்லச்சிரா பகுதியில் இருந்த இயக்குநர் வீட்டிற்கு அருகே, அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றி அவமானப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர் செர்பு பகுதியில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் எதுவும் அவர் தரவில்லை. இருப்பினும், தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சூர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் அறிவித்திருக்கிறார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு பதியப்பட்ட இந்த கவிதை குறித்து பல்வேறு விமர்சனங்களை இந்து அமைப்பினர் முன் வைத்தனர். சிலர் ஆபாச சொற்களில் இயக்குநரை வசைபாடினர். அதனால் அவர் அந்த பதிவை நீக்கியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலுக்கு பினராயி விஜயன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார் பினராயி விஜயன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.