Advertisment

சபரிமலையின் தனித்துவம் தெரியாதவர்கள் தான் சங் பரிவார்கள் - பினராயி விஜயன்

முழு அடைப்பினைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை கோவில் விவகாரம் பினராயி விஜயன் கருத்து, Sabarimala Judgement, Sabarimala issue live updates, Kerala Sabarimala hartal LIVE updates

Sabarimala issue : சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு  அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.  ஆனால் ஐயப்பனை வழிபட வந்த பெண்களை திருப்பி அனுப்பி உள்ளனர் இந்து அமைப்பினர். 17/10/2018 (நேற்று) சபரிமலையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் படிக்க

Advertisment

பெண்களை திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல், பம்பை வரை வந்த ஊடகவியலாளர்களின் வாகனங்களை உடைக்க, சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கலவரமான சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடியடி நடத்தினர். மேலும் சபரிமலை மற்றும் பம்பை பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது.  மேலும் படிக்க : சபரிமலையில் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்ததா? 

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் கேரளா பந்த்

02:30 PM : சபரிமலையின் தனித்துவம் தெரியாதவர்கள் தான் சங் பரிவார்கள் - பினராய் விஜயன் குற்றச்சாட்டு 

ஐயப்பன் கோவிலின் தனித்துவத்தினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார்கள் அழிக்க முற்படுகிறார்கள். அதற்காக அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆதிவாசி - மலயரன் இனத்தவர்கள் சபரிமலை கோவிலில் செய்து வந்த பூஜைகளையும் வழிபாட்டுப் பாரம்பரியங்களையும் எப்படி தட்டிப்பறித்தனர் என்பதே அதற்கு ஒரு சான்று என பினராய் விஜயன் ட்வீட் செய்திருக்கிறார்.

01:40 PM : ஐயப்பன் கோவில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேவையற்ற பதிவுகளை பகிரும் நபர்களை கைது செய்யக் கோரி சைபர் செல்லிற்கு உத்தரவிட்டிருக்கிறார் கேரள டிஜிபி.

12.45 PM : இன்றும் நாளையும்  தொடரும் ஊரடங்கு உத்தரவு என பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.

11.50 AM : கோவிலுக்குள் யார் வந்தாலும் பாதுகாப்பினை தர வேண்டியது எங்களின் கடமை. காவல் துறை விளக்கம்.

11.15 AM: பெண்களின் அனுமதியை எதிர்த்து குருசாமி தற்கொலை

“கோவிலின் நடை திறக்குமுன்பு இந்த உலகைவிட்ட நான் சென்றுவிட வேண்டும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட குருசாமி. கேரளா பந்தளூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற குரு சாமி உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

publive-image தற்கொலை செய்து கொண்ட குருசாமி

10:45 AM : கோழிக்கோடு பகுதியில் இருக்கும் அனைத்து வணிக தளங்களும் மூடப்பட்டன.

10:15 AM : எருமேலி பகுதியில் வெறிச்சோடி இருக்கும் தெருக்கள்

எருமேலி பகுதியில் பந்த் காரணமாக மூடப்பட்டிருக்கும் கடைகள் மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு மாறாக இருக்கும் எருமேலியின் சாலைகள்.

Sabarimala issue live updates

Sabarimala issue live updates

09:45 AM : கேரள காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்

நேற்று கேரளாவில், பெண்களை கோவிலுக்குள் தடுக்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது காவல்துறை. அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கேரள அரசை கண்டித்து கருத்து ஒன்றினை பதிவு செய்திருக்கிறார்.

09:30 AM : ஐயப்ப தர்ம சேனா இயக்குநர் ராகுல் ஈஸ்வர் கைது

ஐயப்ப தர்ம சேனா இயக்குநர் மற்றும் தந்திரி குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ராகுல் ஈஸ்வரை கைது செய்துள்ளது காவல்துறை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதில் மிகவும் திட்டவட்டமாக இருந்தார். மேலும் அது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பகுதியில் ட்வீட் செய்து கொண்டு இருந்தார்.

09:00 AM :  24 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்த சபரிமலை சம்ரக்‌ஷணா சமிதி

பெண்களின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது  பிரவீன் தொகாடியா தலைமையிலான அந்தராஷ்டிரிய இந்து பரி‌ஷத் மற்றும் சபரிமலை சம்ரக்‌ஷணா சமிதி ஆகிய இந்து அமைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

08:30 AM : தமிழக கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

ஐயப்பன் கோவில் விவகாரத்தை தொடர்ந்து, பெண்களின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தம். அதே போல் கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.

Pinarayi Vijayan Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment