Sabarimala Issue live Updates : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து நேற்று முன் தினம் (17/10/2018) அன்று பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் தங்கியிருந்த போராட்டத்திடலை காவல் துறையினர் கலைத்தனர். மேலும் படிக்க சபரிமலை கோவிலில் ஆண்டாண்டு காலமாக பெண்கள் அனுமதி மறுக்கப்பட்டதா ?
Sabarimala
காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் பெரும் சச்சரவு ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். பம்பை, சன்னிதானம், மற்றும் நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் பத்தினம்திட்டா ஆட்சியர்.
பெண்களின் அனுமதியை எதிர்த்து போராட்டக்காரர்கள் குழுமியிருக்கும் இடத்தில் காவல்துறையின் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கி வருகிறார் ஆந்திராவைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் கவிதா. 17ம் தேதி மகர பூஜை மற்றும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டது.
ஏற்கனவே ஆந்திராவில் இருந்து மாதவி என்ற பெண் கோவிலுக்குள் வர முற்பட்ட போது போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் இன்று கவிதா, காவல்துறை உதவியுடன் சன்னிதானத்தை நெருங்க உள்ளார். இந்த லைவ் அப்டேட்டினை ஆங்கிலத்தில் படிக்க
பேச்சுவார்த்தைக்கு தயார் என தேவசம் போர்ட் அறிவிப்பு
பெண்களின் அனுமதிக்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஐயப்ப பக்தர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்திருக்கிறது. சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்ட் எந்த விதமான முடிவினையும் எடுக்கலாம் என கேரள அரசு தேவசம் போர்ட்டிற்கு உரிமை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
01:00PM : சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தளமில்லை - ரமேஷ் சென்னிதலா
காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் கேரள எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் நடைபெறும் பிரச்சனைகள் பற்றி பேசியிருக்கிறார். அப்போது சபரிமலை ஒன்றும் சுற்றுலாத்தளமில்லை. காவல் துறையினர் அங்கு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மாநில அரசு இதை விட சிறந்த முடிவுகளை எடுத்திருக்க வேண்டும என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Sabarimala is not a tourist spot, only devotees go there. Right now what Kerala police is doing is wrong. Had there been our govt we would've handled the situation better. We would've talked to devotees, there would've been no violence: R Chennithala, Congress #SabarimalaTemple pic.twitter.com/IT9wdDfdvA
— ANI (@ANI) 19 October 2018
12:45 PM : இன்று மட்டும் கோவிலுக்குள் செல்ல முயலும் மூன்றாவது பெண்
கவிதா மற்றும் ரெஹனாவை யார் என்று எனக்குத் தெரியாது. அந்த பெண்களை நீங்கள் திருப்பி அனுப்பினால் அது உங்களின் தவறு. எனக்கு அந்த கோவிலுக்கு இன்று செல்ல வேண்டும் என தோன்றுகிறது என மேரி ஸ்வீட்டி என்பவர் கூறியிருக்கிறார். அவர் தற்போது பம்பை காவல்த்துறை பாதுகாப்பில் இருக்கிறார்.
Kerala: A woman devotee Mary Sweety returned midway after she was stopped by protesters at Pamba; says "I don't know about them ((journalist Kavitha Jakkal & woman activist Rehana Fatima). If women have returned, it is your drawback. I want to go there." #SabarimalaTemple pic.twitter.com/vzit2Skxqr
— ANI (@ANI) 19 October 2018
12: 15 PM : பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - தலைமை தந்திரி
பந்தளம் ராஜ குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்த பின்பு “18 படிகளையும் ஏறி பெண்கள் கோவிலுக்குள் வந்தால் சபரிமலை ஐயப்பன் கோவிலை இழுத்து மூடிவிடுவோம்” என்று தலைமை தந்திரி கந்தரரு ராஜீவரு தெரிவித்திருக்கிறார்.
12:00 PM : பெண்களின் முயற்சி தோல்வி
சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் சென்ற இரண்டு பெண்களும் தற்போது சபரிமலையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் திரும்பி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் இம்முடிவு.
11:45 AM : தமிழிசை சௌந்தராரஜன் ட்வீட்... பெண்பாடினை விட பண்பாடு தான் முக்கியம். இந்த செய்தி குறித்து மேலும் படிக்க
11:15 AM : எருமேலியில் தொடங்கிய போராட்டம்
பெண்களின் வருகையை எதிர்த்து, சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் வழியில் அமைந்திருக்கும் எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மயங்கி விழுந்தார். பாஜக தலைவர்கள் ஜி. கோபாலகிருஷ்ணன் உட்பட நிறைய பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11:00 AM : சபரிமலைக்கு வழிபாடு நடத்த வந்த இரண்டு பெண்களையும் பத்திரமாக திருப்பி அனுப்ப முடிவு செய்திருப்பதாக ஐஜி தகவல்.
10:45 AM : டிஜிபி ஆளுநருடன் பேச்சு வார்த்தை
சபரிமலையில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக கேரள ஆளுநர் சதாசிவம், கேரள டிஜிபியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
10:30 AM : கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்ணின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது
இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முற்பட்ட சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவின் வீட்டினை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி அழித்துள்ளனர்.
10:15 AM: கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டி
கோவிலுக்குள் வழிபாடு நடத்த வரும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு அளிக்கப்படும். பலத்தை நிரூபிக்கும் நோக்கில் உள்ளே வருபவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டி.
09:30 AM : ஐயப்ப தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்
இன்று காலை ஐயப்ப தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களின் புகைப்படம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.