/tamil-ie/media/media_files/uploads/2018/10/d478.jpg)
Sabarimala Shrine opens : சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது
Sabarimala Latest News : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : இன்று மாலை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் செப்டம்பர் 28ம் தேதி அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்ற தீர்ப்பினை வெளியிட்டது. அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய முழு ஆதரவினை தெரிவித்தது மட்டுமன்றி கோவிலுக்கு வழிபட வரும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பினை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார். அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
/tamil-ie/media/media_files/uploads/2018/10/sabarimala-759.jpg)
Sabarimala Latest News : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
கேரளா வெள்ளத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது மண்டல பூஜைக்காக கோவிலின் நடை இன்று திறக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு இன்று தான் முதல் முறையாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
05:30 PM : ஐயப்பன் கோவில் நடை திறப்பு... திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோயிலுக்கு வந்த பெண்களை, போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
04:30 PM : போராட்டம் குறித்து உரிய விசாரணை
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் நிலக்கலில் நடந்த போராட்டம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பத்தனம்திட்டா ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
04:00 PM : போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி
தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் நிலக்கலில் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
03: 30 PM : தமிழ் பட பாடலை படமாக்க கோவிலுக்குள் பெண்களை அனுமதித்ததா தேவசம் போர்ட்?
1986ம் ஆண்டு, நம்பினார் கெடுவதில்லை என்ற படத்தின் பாடல் காட்சி ஒன்றினை சபரிமலை கோவிலில் படமாக்கியுள்ளார்கள். அதில் நடிகை ஒருவர் மனமுருகி ஐயப்பனை வேண்டுவது போல் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான உரிமையை 7500 பணம் வாங்கிக் கொண்டு தேவசம் போர்ட் அனுமதி அளித்தது என மலையாள எழுத்தாளர் என்.எஸ். மாதவன் கூறியிருக்கிறார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
The order was ineffectual. In 1986 a Tamil film was shot with actresses dancing on 18 steps. Devaswam Board charged ₹7500 for shooting rights. In a subsequent PIL, Kerala HC completely banned women 10-50 in 1990. That’s how old the prohibition is. 2/5
— N.S. Madhavan (@NSMlive) 29 September 2018
02:00 PM : இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்ளும் பாஜக - கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
பாஜகவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார்களாம். ஆனால் அதே பாஜககாரர்கள் பெண்கள் கோவிலுக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பினை பகிரங்கமாக எதிர்ப்பார்களாம். இரட்டை நிலைப்பட்டுடன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்கள் இருக்கிறார்கள் என கேரள அமைச்சர் வி.எஸ்.சுனில் குற்றச்சாட்டு.
01:30 PM : கோவில் அருகே பெண் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்
ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியில் பணி புரியும் பெண் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார். கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் நடத்திய தாக்குதலில் நிலை குலைந்தார் அப்பெண்மணி. அப்பெண்ணை தாக்கியவர்களை கைது செய்தனர் போலீஸார்.
12: 55 PM : கோவிலுக்குள் செல்ல முயன்ற முதல் பெண்
சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற முதல் பெண் மாதவியை கோவில் வாசலில் இருந்து திருப்பி அனுப்பினார்கள் போராட்டக்காரர்கள். கோவில் படிக்கட்டுகள் வரை சென்ற மாதவியை திருப்பி அனுப்ப முற்படுகையில் காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் இருந்து மாதவி மற்றும் மாதவியின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.
Nilakkal: A woman Madhavi on her way to #SabarimalaTemple returned mid-way along with her relatives after facing protests. #Kerala pic.twitter.com/OUCbOqa1aO
— ANI (@ANI) 17 October 2018
12:30 PM : கோவிலுக்கு செல்ல முயன்ற ஊடகவியலாளர் தடுத்து நிறுத்தம்
பெண் ஊடகவியலாளர் லிபி சி.எஸ் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற போது பொதுமக்கள் அவரை தடுத்தி நிறுத்தியுள்ளனர். நேற்று காலை பத்தினம்திட்டா பகுதியில், ஐயப்பன் கோவிலிற்கு வருகை புரியும் ஆண் பக்தர்களைப் போலவே இவரும் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் திருநீர் அணிந்து பம்பை செல்ல பேருந்து நிறுத்தம் வந்திருக்கிறார். அவரை கண்ட ஊர் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து அவரை பத்திரமாக மீட்டனர்.
12:15 PM : கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கும் ரேஷ்மா...
ஆயிரம் கொலை மிரட்டல்களையும் கண்டு கொள்ளாமல் சபரிமலைக்கு செல்ல தீவிரமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் பக்தை ரேஷ்மா. ஆண்கள் இருப்பது போலவே 41 நாட்கள் விரதம் கடைபிடித்து வருகிறார் ரேஷ்மா.இவரின் விருப்பதிற்கு இவரின் கணவர் உறுதுணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
12:00 PM : உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல்பாடு குறித்து பேசும் பெண் போராட்டக்காரர்
#Sabarimala opened its doors to women for the first time today. Among the leaders protesting against the SC verdict at Nilakkal are Sobha Surendran and MT Ramesh of the BJP.
Follow for LIVE updates: https://t.co/uFMzeShAVF pic.twitter.com/fvEu5OipVu
— The Indian Express (@IndianExpress) 17 October 2018
11:oo AM : எரிமேலி மற்றும் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்திய கேரள அரசு. குவிந்த காவல்படையினர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/sab-police.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/10/sabarimala-police.jpg)
10:20 AM : என்ன தான் நடக்கிறது இந்த நாட்டில் - பாஜக எம்.பி. உதித் ராஜ்
பெண்கள் ஒரு பக்கம், ஆண்களின் கீழ் அடிமையாக நடத்தப்படுவதை எதிர்த்தும், சம உரிமை வேண்டியும் போராட்டம் நடத்துகிறார்கள். சிலரோ, ஆம் நாங்கள் உங்களுக்கு அடிமை தான். சமமாக நடத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு வழிபாட்டிற்கு வரும் பெண்களை பெண்களே தடுத்து நிறுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இது தன்னுடைய சொந்த கருத்து என்பதையும் தெளிவு செய்திருக்கிறார்.
10:10 AM : ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கைது
நிலக்கல் தொடங்கி பம்பை நதி வரையில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது கேரள காவல்துறை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், போராட்டக்காரர்கள் பலரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
09:45 AM : பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய பெண் காவலர்கள் நியமிப்பு
நிலக்கல் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலின் மத்தியிலும் 500க்கும் மேற்பட்ட்ட காவல்துறையினரை பாதுகாப்பு பணிக்காக நியமித்திருக்கிறது கேரள அரசு. மேலும் நூற்றுக்கணக்கான பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். யாருக்கெல்லாம் கோவிலுக்குச் செல்ல விருப்பமோ அவர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிப்படுத்துவோம் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் மனோஜ் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
09:32 AM : நிலக்கல் பகுதியில் தொடரும் பதற்றம்
நேற்று எரிமேலி பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. எரிமேலியினை அடுத்து நிலக்கல் பகுதியாகவே சபரி மலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் வரும் வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள் போராட்டக்காரர்கள். 10 முதல் 50க்கு உட்பட்ட பெண்கள் இருக்கிறார்களா என்ற சோதனையை நடத்துவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
09:25 AM : ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பினராயி
இந்த மண்ணில் இருக்கும் சமத்துவ, மதசார்பற்ற தன்மையை குழைக்கும் வகையில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு இடம் தரமால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இடதுசாரி பொதுவுடமைக் கட்சி எப்போதும் மக்களின் நலன் மற்றும் உரிமை எதுவோ அதற்காகவே துணை நிற்கும் என்றும் நேற்று பேசியிருக்கிறார்.
09:15 AM : பினராயி விஜயனின் நிலைப்பாடு
இப்பிரச்சனையின் ஆரம்பம் தொட்டே பினராயி விஜயன் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை பின்பற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆகவே பெண்களின் அனுமதிக்கு அரசு சார்பில் எவ்வித எதிர்ப்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கும் உரிமை ஒருவருக்கும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.