Advertisment

சபரிமலை விவகாரம் : ரத யாத்ரை நடத்தப் போவதாக பாஜக அறிவிப்பு

எல்.கே அத்வானியின் யாத்ரை எப்படி மதக்கலவரத்தை ஏற்படுத்தியதோ அப்படி தான் இந்த யாத்ரை கேரளத்தில் பிரச்சனைகளை கொண்டு வரும் - சிபிஎம் தலைவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்ரை

சபரிமலை  ஐயப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்ரை

சஜூ ப்லீப்

Advertisment

சபரிமலை  ஐயப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்ரை : ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டிற்காக கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு ஒன்றினை வழங்கியது உச்ச நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து இம்மாதம் சபரிமலை கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று பல பெண்கள் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் கோவிலின் முன்னாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் கோவிலுக்குள் பெண்களால் செல்ல இயலவில்லை.

மேலும் படிக்க : சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் செல்ல முயன்ற ரஹானா ஃபாத்திமா 

சபரிமலை  ஐயப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்ரை

ஒவ்வொரு கட்சியினரும் சபரிமலை விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் நடந்து கொண்டனர். இந்நிலையில் பாஜக சார்பில் 6 நாட்கள் ரதயாத்ரை நடைபெறும் என அறிவித்திருக்கிறது.  இந்த ரத யாத்ரையை கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் பாரத் தர்ம சேனா கட்சியின் தலைவர் துஷார் வேலப்பள்ளி முன்னிலையில் நடைபெற உள்ளது. ஈழவக் குழுவின் தலைவராக இருந்த வேலப்பள்ளி நடேசனின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கசரகோட் மாவட்டத்தில் இருக்கும் மாதூர் கோவிலில் நவம்பர் 8ம் தேதி தொடங்கி எருமேலியில் இந்த ரதயாத்ரை நவம்பர் 13ம் தேதி முடிவடைகிறது.  இந்த ரத யாத்ரையில் இந்துக்கள் மட்டும் பங்கேற்கவில்லை. இந்த ரதயாத்ரை அமையும் வழியில் இருக்கும் 52 கிருத்துவ தேவாலயங்கள் மற்றும் 12 இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்களில் இருக்கும் மத குருக்களிடம் சென்று அவர்களின் ஆசிர்வாதங்களை வாங்க இருப்பதாகவும் ஸ்ரீதரன் பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த ரதயாத்ரையின் மூலம், மக்களிடம் ஏ.கே. கோபாலன், ஈ.கே. நயனார் எவ்வாறாக சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை விளக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த யாத்ரையில் கேரளாவில் இருக்கும் துறவிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை பொதுவுடமைக் கட்சியை சேர்ந்திருக்கும் பெண்களும் கூட புரிந்திருக்கிறார்கள் என மற்றுமொரு பாஜக தலைவர் கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பெயரில் இந்த ரத யாத்ரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. To read this article in English

சபரிமலை  ஐயப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்ரை எதிர்ப்பு

கேரளாவை ஆளும் பொதுவுடமை இடதுசாரிக் கட்சியின் உறுப்பினர் விஜயராகவன் ”கேரளத்தில் இருக்கும் சட்ட ஒழுங்கில் பிரச்சனையை கொண்டு வருவதற்காகவே இந்த ரத யாத்ரையை மேற்கொள்ள இருக்கிறது பாஜக. எல்.கே அத்வானியின் ரத யாத்ரை பாபர் மசூதி இடிப்பிற்கும், மதக்கலவரங்களுக்கும் வழிவிட்டது போல் தான் பாஜகவின் இந்த யாத்ரை கேரளாவில் மதக் கலவரத்தை உண்டாக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அமித் ஷா போன்றோர்கள் ஒரு மதக்கலவரத்தை எப்படியும் உருவாக்குவார்கள் என்று கூறியிருக்கிறார். அடுத்த மாதம் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை இது போன்ற யாத்ரைகளை பாஜக மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதில் இருந்து பதட்டமான சூழல் கேரளத்தில் நிலவி வருகிறது.

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment