இருவர் இல்லை... இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்...

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று செப்டம்பர் 28, 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சபரிமலை விவகாரம் கோவிலுக்கு சென்ற பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு : உச்ச நீதிமன்றம் கடந்த 2018, செப்டம்பர் 28ம் தேதி வரலாற்று தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, அனைத்து வயது பெண்களும் கேரளாவில் இருக்கும் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலான சபரிமலைக்கு தரிசனம் செய்ய போகலாம்.

பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், சாதாரண பெண்கள் பலரும் முயற்சி மேற்கொண்டும் பலன் கிட்டவில்லை. ஆனால் போராட்டங்களும், வன்முறைகளும் இந்து அமைப்பினரால் கேரளம் முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இந்நிலையில், பல்வேறு பிரச்சனைகளையும் சமாளித்து, ஐயப்பன் கோவிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு ஜனவரி 2ம் தேதி வரலாறு படைத்தார்கள் மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி.

மேலும் படிக்க : சபரிமலை சென்றதால் தாக்குதலுக்கு ஆளான கனக துர்கா

இந்து அமைப்பினர்களின் வன்முறை வெறியாட்டங்களுக்கு தப்பி, கொச்சினில் சில நாட்கள் அரசு கண்காணிப்பில் வாழ்ந்தனர் இந்த இரண்டு பெண்களும். கனகதுர்கா தன்னுடைய சொந்த வீட்டிற்கு திரும்பிய போது, அவருடைய மாமியார் அவரை அடித்து தாக்கியதாக புகார் அளித்துள்ளார் கனகதுர்கா. கடுமையான தாக்குதலுக்கு ஆளான கனகதுர்கா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சபரிமலை விவகாரம் கோவிலுக்கு சென்ற பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்கிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இந்த இரண்டு பெண்களும் எங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மேலும் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட மூவர் அமர்வு இந்த விசாரணையை மேற்கொண்டது.

இந்நிலையில் கோவிலுக்குள் சென்று பிரச்சனைகளை சந்திக்கும் இரண்டு பெண்களுக்கும் முறையான பாதுகாப்பினை கேரள அரசு வழங்க வேண்டும் என ரஞ்சன் கோகாய், எல்.என். ராவ் மற்று தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான கனக துர்கா மற்றும் இவருடன் இணைந்து கோவிலுக்கு சென்ற பிந்து இருவரின் சார்பில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார்.

51 பெண்கள் இதுவரை சபரிமலை சென்றுள்ளனர் :

கேரள அரசு தரப்பில் இருந்து சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் இதுவரை 51 பெண்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு கேட்டுள்ளது. ஆனால் அந்த விவாதத்தை தவிர்த்துவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் இதுவரை சபரிமலை சென்ற பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

சபரிமலை விவகாரம் கோவிலுக்கு சென்ற பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு

சபரிமலை விவகாரம் கோவிலுக்கு சென்ற பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close